For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடு முழுவதும் ஏடிஎம்களில் பணம் இல்லை.. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு அடித்தளம்?

நாடு முழுவதும் ஏடிஎம்களில் பணம் இல்லாததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி : நாடு முழுவதிலுமுள்ள ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரியாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

புதிய ரூ.200 நோட்டுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் நாட்டில் உள்ள 2.2 லட்சம் ஏடிஎம் மையங்களில் புதிய மஞ்சள் நிறத்திலான ரூ. 200 நோட்டுகளை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி 4-ஆம் தேதி உத்தரவிட்டது.

Many ATMs facing problems: What could be the cause?

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பணம் எடுக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த பிரச்சினைக்கான காரணமும் தெரியவில்லை.

ஏடிஎம்களில் பணம் இல்லாததற்கு முக்கிய காரணம் டிஜிட்டல் மய பணவரித்தனை என்று கூறப்படுகிறது. இது வெறும் யூகம் மட்டுமே. உண்மையான காரணம் தெரியவில்லை. ரிசர்வ் வங்கியிலிருந்து பணம் குறைந்த அளவில் விநியோகம் செய்யப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

இதில் சுவாரஸ்மான தகவல் என்னவென்றால் கடந்த ஆண்டு மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை இந்தியாவில் 1,782 ஏடிஎம்கள் மூடப்பட்டன.

கடந்த முறை பணமதிப்பிழப்பின்போதும், புதிதாக ரூ. 500 மற்றும் ரூ. 2000 நோட்டுகளை நிரப்பும் நடவடிக்கையால் வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்றது குறிப்பிடத்தக்கது.

English summary
Many ATM machines across the country are said to be either out of cash or are not working which is causing great inconvenience to people. The exact reason behind non-functioning of ATMs is not clear, but reports suggest two possible reasons.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X