For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவாவின் பேரவலம்.. மருத்துவமனை தரையில் படுக்ககூட இடமில்லை.. ஸ்டோர் ரூமில் படுத்திருக்கும் நோயாளிகள்

Google Oneindia Tamil News

பனாஜி: கோவா அரசு மருத்துவமனையில் தரையில் படுக்க கூட இடம் இல்லாததால் மருத்துவமனையின் ஸ்டோர் ரூமில் நோயாளிகள் பலர் படுத்து கிடக்கும் அவல நிலை நீடித்து வருகிறது.

சுற்றுலா பயணிகளுக்கு விருப்பமான இடமாக, சொர்க்கபுரியாக திகழ்ந்து வரும் கோவா தற்போது கொரோனா 2-வது அலையில் சிக்கி படாதபாடு படுகிறது.

அட்சய திருதியை : ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் - தங்க நெல்லிக்கனி மழையாக பொழிந்த நாள் அட்சய திருதியை : ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் - தங்க நெல்லிக்கனி மழையாக பொழிந்த நாள்

கோவா மாநிலம் கொரோனா வைரஸுக்கு எதிராக கடுமையான போரில் ஈடுபட்டு வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

உயிரிழக்கும் நோயாளிகள்

உயிரிழக்கும் நோயாளிகள்

படுக்கைகள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாமல் பல நோயாளிகள் இறந்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் 26 நோயாளிகள் பரிதாபமாக இறந்தனர்.

அல்லாடும் மருத்துவமனை

அல்லாடும் மருத்துவமனை

தற்போது மேலும் 15 நோயாளிகள் இதே மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்துள்ளனர். இந்த நிலையில் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வரும் காட்சிகள் கண்களை குளமாக்குகிறது. தினமும் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனை அல்லாடுகிறது.

ஸ்டோர் ரூமில் இருக்கும் நோயாளிகள்

ஸ்டோர் ரூமில் இருக்கும் நோயாளிகள்

படுக்கைகள் இல்லாததால் நோயாளிகள் தரையில் படுத்துக் கொள்ளப்படுவதும், கவனிக்கப்படாமல், உதவிக்காக அழுவதும் போன்ற கொடூரமான காட்சிகளை அந்த மருத்துவமனை பார்த்து வருகிறது. மருத்துவமனையில் தரையில் படுக்க கூட இடம் இல்லாததால் மருத்துவமனையின் ஸ்டோர் ரூமில் நோயாளிகள் பலர் படுத்து கிடக்கும் அவல நிலை நீடித்து வருகிறது.

தயவு செய்து உதவுங்கள்

தயவு செய்து உதவுங்கள்

வார்டுக்குள் நோயாளிகள் பரிதாபமாக படுத்து கிடக்கின்றனர். அவர்களுக்கு உதவ போதிய மருத்துவமனை ஊழியர்கள் இல்லை. உறவினர்களே நோயாளிகளுக்கு உதவுகிறார்கள்.கொரோனா தொற்றால் தனது மைத்துனரை இழந்த உறவினர் ஒருவர் "தயவுசெய்து கோவாவுக்கு உதவுங்கள், கோவா மக்களைக் காப்பாற்றுங்கள். நிலைமை மிகவும் மோசமானது" என்றார்.

English summary
The Goa government hospital does not even have a place to lie on the floor and many patients are lying in the hospital's store room
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X