For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிர வைக்கும் டேட்டா.. 5 ஆண்டுகளில் மாவோயிஸ்ட் தாக்குதல்களில் 352 பாதுகாப்பு படையினர் பலி!

Google Oneindia Tamil News

கோராபுட்: மாவோயிஸ்டுகள் கடந்த 5 ஆண்டுகளில் நடத்திய தாக்குதல்களில் பாதுகாப்புப் படையினர் 352 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவோயிஸ்டுகளை ஒடுக்கிவிட்டோம்; மாவோயிஸ்டுகளின் பிடியில் இருந்து ஆதிபழங்குடிகள் விடுவிக்கப்பட்டுவிட்டனர் என ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. ஆனால் இதற்கு பதில் தரும் வகையில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

maoists kill 352 security forces in last five years

கடந்த 10 ஆண்டுகளில் 2290 தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர் மாவோயிஸ்டுகள். இதில் 1788 பொதுமக்களும் 990 பாதுகாப்புப் படையினரும் பலியாகி உள்ளனர்.

கட்சிரோலி நக்சல் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்..உயிரிழந்தவர்களுக்கு வீரவணக்கம்கட்சிரோலி நக்சல் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்..உயிரிழந்தவர்களுக்கு வீரவணக்கம்

குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் மாவோயிஸ்டுகள் 2016- ஆம் ஆண்டு அதிகபட்சமாக 262 தாக்குதல்களை நடத்தினர். அதில் 122 பொதுமக்களும் 60 பாதுகாப்புப் படையினரும் பலியாகினர்.

2014-ல் 97, 2015-ல் 56, 2016-ல் 60. 2017-ல் 76, 2018-ல் 73 பாதுகாப்புப் படையினரை மாவோயிஸ்டுகள் படுகொலை செய்துள்ளனர். நடப்பாண்டில் இன்றைய தாக்குதலுடன் சேர்த்து 30 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

2 ஆண்டுகளுக்கு முன்னர் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் மாவோயிஸ்டுகள் பலம் குறைந்துவிட்டதாக பத்திரிகைகள் எழுதி வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
According to the Data, Maoists Killed 352 Security Forces in the Last Five years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X