For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சன் டிவி கட்டிடம், கலாநிதியின் ரூ. 100 கோடி டெபாசிட் உள்பட முடக்கப்பட்ட 11 சொத்துகள் பட்டியல்!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஏர்செல்-மேர்க்சிஸ் முறைகேடு வழக்கில் அமலாக்கப் பிரிவானது சன் குழும அதிபர் கலாநிதி மாறனின் நிரந்தர டெபாசிட் தொகையான ரூ100 கோடி, சன் நெட்வொர்க் குழுமத்தின் கட்டிடம் உட்பட ரூ742 கோடி மதிப்பிலான 11 சொத்துகளை முடக்கியுள்ளது.

Marans' Assets Seized in Aircel-Maxis Case Include Fixed Deposit Worth 100 Crores

அமலாக்கப் பிரிவு முடக்கியுள்ள சொத்துகள் விவரம்:

1) தயாநிதி மாறன் மற்றும் பலரின் நிரந்தர வைப்புத் தொகை ரூ.7.47 கோடி

2) சன் டைரக்ட் (டி.டி.ஹெச்) நிறுவனத்தின் நிரந்தர வைப்புத் தொகை ரூ31.34 கோடி

3) செளத் ஏசியா எஃப்.எம் (எஃப்.எம் ரேடியோ) நிறுவனத்தின் நிரந்தர வைப்புத் தொகை ரூ6.19 கோடி

4) செளத் ஏசியா எஃப்.எம் நிறுவனத்தின் பரஸ்ர நிதி முதலீடு ரூ 15.14 கோடி

5) கலாநிதி மாறனின் நிரந்தர டெபாசிட் தொகை ரூ100 கோடி

6) கலாநிதி மாறன் பரஸ்பர நிதி முதலீடு - ரூ 2.78 கோடி

7) கலாநிதி மனைவி காவேரி கலாநிதியின் நிரந்தர வைப்பு நிதி- ரூ1.30 கோடி

8) காவேரி கலாநிதியின் பரஸ்பர நிதி முதலீடு ரூ1.78 கோடி

9) கல் கம்யூனிகேசன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிலம் மற்றும் கட்டிடம் - ரூ175.55 கோடி

10) சன் நெட்வொர்க் குழுமத்தின் கட்டிடம் (சன் டி.வி. இடம்) மற்றும் காலி இடம் - ரூ266 கோடி

11) சன் டைரக்ட் (டி.டி.ஹெச்) நிறுவனத்தின் கலாநிதி மாறனின் பங்குகள் - ரூ139 கோடி

இதில் சன் டைரக்ட் (டி.டி.ஹெச்) நிறுவனத்தில்தான் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்தது. இதன் பங்குதாரர்களாக இருப்பவர்கள் கலாநிதி மற்றும் அவரது மனைவி காவேரி. இருவரும் 80% பங்குகளை வைத்துள்ளனர்.

சன் குழுமத்துக்குச் சொந்தமான எஃப்.எம். நிறுவனத்தில் சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்துக்கு 60%, ஏ.ஹெச். மல்டிசாப்ட் நிறுவனத்துக்கு 20%, மொரீசியசின் செளத் ஏசியா மல்டிமீடியா டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு 20% பங்குகள் உள்ளன.

சன் டிவி நெட்வொர்க்கில் கலாநிதி மாறனுக்கு 75% பங்குகள் உள்ளன.

கல் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தில் கலாநிதி மாறனுக்கு 90%; காவேரி கலாநிதிக்கு 10% பங்குகள் உள்ளன.

தயாநிதி மாறனால் ஏர்செல் மிரட்டப்பட்டு அதை வாங்கிய மேக்சிஸ் நிறுவனமானது, மொரீசியஸ் உள்ள மல்டிசாப் நிறுவனம் உள்ளிட்டவற்றின் மூலமாக சன் டைரக்ட் நிறுவனத்தில் முதலீடு செய்தது; இதில் அன்னிய செலாவணி மோசடி நடைபெற்றுள்ளது என்பதுதான் அமலாக்கப் பிரிவின் குற்றச்சாட்டு. இதனடிப்படையிலேயே தயாநிதி, கலாநிதி மாறனின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

English summary
The Maran brothers, once a powerhouse in Tamil Nadu, own assets worth hundreds of crores - 740 crores of which have been seized today as part of a money-laundering case. A separate case of money-laundering has been filed against the Marans by the Enforcement Directorate which said today that a fixed deposit worth 100 crores in the name of Kalanithi Maran is among a series of bank accounts and properties that will be seized against nearly 750 crores of "illegal gratification" that was received by the media baron's companies via Mauritius
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X