For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேம்பிரிட்ஜ் அனலிடிகா சர்ச்சை - 9 மில்லியன் டாலர் இழந்த ஃபேஸ்புக் ஓனர் மார்க் ஜூகர்பெர்க்

கேம்பிரிட்ஜ் அனலிடிகா சர்ச்சையால் நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனப் பங்கு திங்கட்கிழமை ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் சுமார் 7 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    பேஸ்புக் ஆப்பை டெலிட் செய்ய சொல்லும் வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்- வீடியோ

    டெல்லி: கேம்பிரிட்ஜ் அனலிடிகா சர்ச்சையால் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பல சிக்கல்கள் உருவாகியுள்ளன. இந்தப் பிரச்னையின்மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் அந்நிறுவனத்தின் லாபம் பல மில்லியன் அளவில் குறைந்துள்ளது.

    உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பேர் பயன்படுத்தும் ஃபேஸ்புக் நிறுவனம் தற்போது புதிய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளது.

    Mark Zuckerberg Has Lost $9 Billion

    சுமார் 5 கோடி பயணர்களின் தகவல்கள் ஒரு செயலி மூலம் திருடப்பட்டு அது கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம், அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, ஃபேஸ்புக்கில் உள்ள 50 மில்லியன் வாக்காளர்களின் தகவல்களைத் திருடி, ட்ரம்ப் தேர்தலில் வெற்றிபெற உதவி செய்ததாக, திங்கட்கிழமையன்று நியூஸ் 4 என்ற தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. இது உலக அளவில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    'Psychographic Modeling Technique' தொழில்நுட்பத்தின் மூலம் குறித்த தகவல்கள் திருடப்பட்டதாகவும், இதனை டொனால்டு ட்ரம்ப் அரசியல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்திக் கொண்டதாகவும் நியூஸ் 4 தொலைக்காட்சி குற்றம்சாட்டியது.

    இதுபற்றி விசாரணை நடத்த இங்கிலாந்து எம்.பி. டாமியன் கொலின்ஸ் என்பவர் தலைமையில் எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, முகநூல் அதிபர் மார்க் ஜூகர்பெர்க், 26ஆம் தேதிக்குள் தங்கள் முன்பு நேரில் ஆஜராகி, இவ்விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று செவ்வாய்கிழமையன்று உத்தரவிட்டது.

    இதனால், ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பல சிக்கல்கள் உருவாகியுள்ளன. இந்தப் பிரச்னையின்மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் அந்நிறுவனத்தின் லாபம் பல மில்லியன் அளவில் குறைந்ததாகக் கூறப்படுகிறது.

    இந்த செய்தியால், உலகம் முழுவதும் அதிக பயனாளர்களை கொண்ட ஃபேஸ்புக் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்தப் பிரச்னையின்மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் அந்நிறுவனத்தின் லாபம் பல மில்லியன் அளவில் குறைந்ததாகக் கூறப்படுகிறது.

    தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றதற்கு ஃபேஸ்புக் நிறுவனமும் ஒருவகையில் காரணம் என்று சொல்லப்படுகிறது. கணக்கு பயணர்களின் தகவல்களை பாதுகாப்பது அந்நிறுவனங்களின் கடமையாகும்.

    எந்த ஒரு காரணத்திற்காகவும், வாடிக்கையாளர்களின் தகவல்கல் வெளியில் தெரிவிக்கக் கூடாது என்று ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திற்கு ஃபேஸ்புக் உதவியது அம்பலமானதால்

    இதன் எதிரொலியாக், ஃபேஸ்புக்கில் முதலீடு செய்யும், நியூயார்க் முதலீட்டாளர்கள் ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர். நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனப் பங்கு திங்கட்கிழமை ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் சுமார் 7 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

    திங்கட்கிழமையன்று மட்டும் சுமார் 5 பில்லியன் டாலர் அளவிலான சரிவு ஏற்பட்டுள்ளது. செவ்வாய்கிழமையன்று ஃபேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜூக்கபெர்க் வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பு 4 பில்லியன் டாலர் வரையில் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு நாட்களில் 9 பில்லியன் டாலர் அளவிற்கு சரிவடைந்துள்ளது.

    English summary
    It’s been a rough start to the week for Mark Zuckerberg. The Facebook founder and CEO became $5 billion poorer in a matter of hours on Monday, and his net worth had dropped by nearly $4 billion more by midday on Tuesday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X