For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாஜ்மஹாலை பார்த்து அசந்து போய் 'லைக்' செய்த ஜூக்கர்பெர்க்!

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் உலக பாரம்பரிய காதல் சின்னமான தாஜ்மஹாலை நேரில் பார்த்து அசந்து போனார்.

கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள பேஸ்புக் தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு நடைபெற்ற கேள்வி - பதில் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். அங்கு சமூகம் மற்றும் பொருளாதார சவால்களை சமூக வலைதளங்கள் மூலம் எவ்வாறு எதிர்கொள்வது என மோடி மற்றும் ஜூக்கர்பெர்க் விவாதித்தனர்.

I'm in India for our Townhall Q&A tomorrow, and I decided to visit the Taj Mahal. I've always wanted to see this.It is...

Posted by Mark Zuckerberg on Tuesday, October 27, 2015

இந்நிலையில், பேஸ்புக் சமூக வலைதளத்தின் நிறுவனர் மார்க ஜூக்கர் பெர்க் இந்தியா வந்துள்ளார். டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள உள்ளார். அப்போது ஐ.ஐ.டி மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசுகிறார். மேலும், பேஸ்புக் பயன்படுத்துவது குறித்து பொதுமக்களின் கேள்விகளுக்கும் நேருக்கு நேர் ஜூக்கர் பெர்க் விளக்கம் அளிக்கிறார்.

இதனிடையே ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை மார்க் பார்வையிட்டார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது: காதலின் மறு உருவமாக இதை பார்க்கிறேன். நான் இதை எப்போதும் பார்க்க விரும்புகிறேன். இந்த கட்டடக் கலையைப் பார்த்து வியந்து போனதாக பதிவு செய்துள்ளார்.

English summary
Facebook CEO and co-founder Mark Zuckerberg today visited the Taj Mahal. Zuckerberg wrote his experience on Facebook
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X