For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"நமஸ்தே மாம்!... எப்படிடி இருக்கிறே?".. செவ்வாயில் "கொஞ்சி"க் கொண்ட மங்கள்யானும், கியூரியாசிட்டியும்

Google Oneindia Tamil News

சென்னை: இது செம... செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதைக்கு முதன் முதலாக போயுள்ள இந்தியாவின் மங்கள்யான் விண்கலமும், ஏற்கனவே செவ்வாய் கிரகத்துக்கே போய் இறங்கி டேரா போட்டு ஏகப்பட்ட வேலைகளைச் செய்து பிரபலமாகி விட்ட அமெரிக்கவின் கியூரியாசிட்டி விண்கலமும், டிவிட்டர் மூலம் பேசிக் கொள்வதைப் போன்ற டிவிட் செய்திகள் கலகலப்பைக் கூட்டியுள்ளன.

இன்று காலை சுமார் ஏழே முக்கால் மணி அளிவில் செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் போய் இணைந்து கொண்டது இந்தியாவின் மங்கள்யான்.

இதன் மூலம் எடுத்த எடுப்பிலேயே செவ்வாயைத் தொட்ட முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கும், மங்கள்யானுக்கும் வாழ்த்துகள் குவிந்து கொண்டுள்ளன. இந்தியர்கள் பெருமிதத்துடன் "காலரை" உயர்த்திக் கொண்டு ராஜ நடை போட்டு வருகின்றனர்.

"காதல்" கொண்ட கியூரியாசிட்டியும்.. மங்கள்யானும்!

இந்த நிலையில் டிவிட்டரில் ஒரு கலகலப்பு நடந்து கொண்டுள்ளது. அதாவது மங்கள்யானும், அமெரிக்காவின் கியூரியாசிட்டி விண்கலமும் பேசிக் கொள்வதைப் போல அந்த டிவிட்கள் அமைந்துள்ளன. வாங்க அந்த சுவாரஸ்யமான உரையாடலைப் பார்ப்போம்.....

நமஸ்தே.. !

கியூரியாசிட்டி ரோவர் பெயரில் அனுப்பப்பட்ட டிவிட் செய்தியில், நமஸ்தே மார்ஸ் ஆர்பிட்ட்டர், இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். இந்தியாவின் முதல் கிரகம் தாண்டிய பயணத்தின் சாதனைக்கு பாராட்டுகள் என்று கூறப்பட்டிருந்தது கியூரியாசிட்டியின் டிவிட்டில்.

ஹவ்டி.. மார்ஸ் கியூரியாசிட்டி?

பதிலுக்கு மங்கள்யான் விடுத் டிவிட்டில், ஹவ்டி மார்ஸ் கியூரியாசிட்டி.. தொடர்ந்து என்னுடன் தொடர்பில் இரு.. நானும் இங்கேயேதான் இருப்பேன்...

சரி, இட்லி சாப்பிட்டு வர்றேன்... காத்திரு!

மங்கள்யான் விடுத்துள்ள இன்னொரு டிவிட்டில், சரி, நான் பிரேக்பாஸ்ட்டை முடித்து விட்டு வருகிறன்.. என்னா வெயில் என்னா வெயில்.. பேட்டரி உனக்கு நல்ல தீனிதான் இன்று....!

அங்க என்ன செவப்பா தெரியுது...!

இன்னொரு மங்கள்யான் டிவிட்டில்....அது என்ன சிவப்பாக தெரிகிறது. ஓ.. அதுதான் செவ்வாயா... அது என்னை நோக்கிப் பார்க்கிறதோ....!

நான்தாண்டா மேவன்.. உன்

நான்தாண்டா மேவன்.. உன் "அண்ணன்"!

அதேபோல மங்கள்யானுக்கு சில நாட்களுக்கு முன்பு செவ்வாயின் எல்லையைத் தொட்ட அமெரிக்காவின் மேவன் விண்கலமும் மங்கள்யானுக்கு வாழ்த்து கூறியுள்ளது. இதுதொடர்பாக விடுத்துள்ள டிவிட் செய்தியில், இஸ்ரோவின் மார்ஸ் ஆர்ப்டிடருக்கு நல்வரவு.. செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இணைந்துள்ள மங்கள்யானை வரவேற்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

English summary
NASA's Mars Rover Curiosity and India's MOM have exchanged their greetings each other in Twitter!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X