For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”கீர்த்திசக்ரா” விருது பெற்றார் பதன்கோட் தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர் ஜெகதீஷ் சந்த்!

Google Oneindia Tamil News

டெல்லி: பஞ்சாப் மாநிலம் பதன்கோட் தாக்குதலில் இன்னுயிர் ஈந்த ராணுவ வீரரான ஜெகதீஷ் சந்துக்கு கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 7 வீரர்கள் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகளையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இந்நிலையில், ராணுவத்தில் வீரதீர செயல்கள் புரிந்த வீரர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

Martyred jawan who killed terrorist in Pathankot honored with Kirti Chakra

பதான்கோட் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் ஜெகதீஷ்க்கு கீர்த்தி சக்ரா வழங்கப்பட்டது. ஜெகதீஷ் சார்பில் அவரது மனைவி விருதினை பெற்றுக் கொண்டார். கலோனல் எம்.என்.ராய்க்கு சூர்யா சக்ரா விருது வழங்கப்பட்டது. ஜனவரி மாதம் 27 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் ராய் கொல்லப்பட்டார். அவரது தாய் இந்த விருதினை பெற்றுக் கொண்டார்.

இந்தோ-மியான்மர் எல்லைப் பகுதியில் நடைபெற்ற தேடுதல் பணியில் பங்கெடுத்த ஹவில்தார் டன்கா குமார் லிம்பு என்ற வீரருக்கு சூர்ய சக்ரா விருது வழங்கப்பட்டது. அதேபோல், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த உயிரிழந்த இரண்டு போலீஸ் கான்ஸ்டபிள்களுக்கு சூர்ய சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

English summary
Sepoy Jagdish Chand, who bravely chased and killed one of the terrorists who had attacked the Pathankot air base before being martyred, was among the 58 personnel who were honoured with gallantry and other service-related awards by President Pranab Mukherjee.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X