For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லி பட்டாசு கிடங்கில் தீ விபத்து.. 17 பேர் உடல் கருகி பலி

டெல்லி பாவானா பகுதியில் உள்ள பட்டாசு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி பாவானா பகுதியில் உள்ள பட்டாசு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த மோசமான தீ விபத்தில் 17 பேர் உடல் கருகி மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

நேற்று மாலை இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு துறையினர் கஷ்டப்பட்டு உள்ளனர்.

இந்த தீ விபத்து பகுதியை டெல்லி முதல்வர் 5 மணி நேரம் கழித்து வந்து பார்வையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. தற்போது டெல்லி முதல்வர் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

தீ விபத்து

தீ விபத்து

இந்த தீ விபத்து பாவானா தொழிநுட்ப பகுதியில் இருக்கும் பட்டாசு கிடங்கில் ஏற்பட்டு இருக்கிறது. இந்த தீ வேகமாக கட்டிடம் முழுக்க பரவியுள்ளது. இந்த தீயை அணைக்க உடனடியாக அங்கு தீயணைப்பு படையினர் வந்துள்ளனர்.

போராட்டம்

போராட்டம்

2 மணி நேரம் கஷ்டப்பட்டு தீயை அணைக்க முடியாமல் திணறி இருக்கிறார்கள். டெல்லியில் ஏற்கனவே இருக்கும் புகையுடன் இந்த புகையும் சேர்ந்து இருக்கிறது. இந்த மோசமான தீயை 2.30 மணி நேரத்திற்கு பின் 3 தீ அணைப்பு வாகனங்கள் சேர்ந்து அணைத்து இருக்கிறது.

மரணம்

மரணம்

இந்த தீ விபத்தில் 17 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இதில் 7 பேர் பெண்கள். இவர்கள் அந்த பட்டாசு கிடங்கில் வேலை பார்த்தவர்கள். 2 பேர் மோசமான காயங்களுடன் உயிர் தப்பினர்.

டெல்லி

டெல்லி

இந்த இடத்திற்கு டெல்லி முதல்வர் மிகவும் தாமதமாக வந்து பார்வையிட்டு இருக்கிறார். 5 மணி நேரம் கழித்துதான் அவர் இந்த இடத்திற்கு வந்துள்ளார். டெல்லியில் இருக்கும் கட்சிகள் முதல்வரின் இந்த மெத்தன போக்கிற்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறது.

குடும்பத்திற்கு நிவாரணம்

குடும்பத்திற்கு நிவாரணம்

தற்போது இறந்தவர் குடும்பத்திற்கு டெல்லி அரசு நிவாரண நிதி கொடுக்கப்படும் என்று அறிவித்து இருக்கிறது. ஒரு நபருக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

English summary
Massive fire took place in a crackers warehouse of Bawana industrial area in Delhi. The fire created in the early morning. 17 people including 10 women died in the fire. 2 people injured in the incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X