For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரா: கிருஷ்ணஜென்மபூமி அருகே உள்ள மசூதியை அகற்ற கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்றது நீதிமன்றம்

Google Oneindia Tamil News

மதுரா: உத்தரப்பிரதேசத்தில் கிருஷ்ணஜென்மபூமி அருகே உள்ள மசூதியை அகற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரா நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

மதுரா கிருஷ்ணஜென்மபூமி அருகே மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதி 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இந்த மசூதியும் கோவிலும் இருக்க வேண்டு என்பது 1968-ல் போடப்பட்ட ஒப்பந்தம்.

Mathura Dist. Court admits plea seeking removal of mosque near Krishna janmabhoomi

இந்த ஒப்பந்தமானது 1973-ல் மதுரா நீதிமன்றத்தால் பதிவும் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த ஒப்பந்தமே தவறானது; கோவில் அருகே உள்ள மசூதியை அகற்றியாக வேண்டும் என ஒரு மனு மதுரா சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபப்ட்டது. இம்மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

நீட் தேர்வில் ஒடிஷாவின் சோயிப் அஃப்டாப் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று சாதனைநீட் தேர்வில் ஒடிஷாவின் சோயிப் அஃப்டாப் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று சாதனை

இதனையடுத்து மதுரா மாவட்ட நீதிமன்றத்தில் மசூதியை அகற்ற கோரியும் மசூதி அமைந்துள்ள 13.37 ஏக்கர் நிலத்தையும் கிருஷ்ணஜென்ம பூமி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கக் கோரியும் விஷ்ணு ஜெயின் என்பவர் ஒருமனுவைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை தற்போது மதுரா மாவட்ட நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டிருக்கிறது.

நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் இந்த வழக்கில் நவம்பர் 18-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது. ஆகையால் இந்த வழக்கில் தொடர்புடைய அத்தனை பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப மதுரா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

English summary
Mathura Dist court has agreed to hear a plea seeking removal of mosque near Sri Krishna Janmabhoomi Temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X