For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரச்சராத்தில் ஓவர் சீன் போட்ட நடிகை ஹேமமாலினி: திட்டித் தீர்த்த மக்கள், பாஜகவினர்

By Siva
|

மதுரா: காரை விட்டு இறங்க மறுத்த மதுரா தொகுதி பாஜக வேட்பாளரான ஹேமமாலினியை பார்த்து மக்கள் கூச்சலிட்டனர். மேலும் அவரை பாஜக தொண்டர்களே திட்டித் தீர்த்தனர்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா தொகுதியில் பாஜக சார்பில் நடிகை ஹேமமாலினி போட்டியிடுகிறார். அவரை வேட்பாளராக தேர்வு செய்ததற்கு பாஜகவினர் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரால் பாமர மக்களை புரிந்து கொள்ள முடியாது என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் ஹேமமாலினி பிரச்சாரம் செய்ய தொகுதிக்கு வந்தார்.

லேட்

லேட்

பிரச்சார திட்டத்தை திடீர் என்று மாற்றிய ஹேமமாலினி தனது சவுகரியத்திற்கேற்ப லேட்டாக வந்தார். இதனால் கடுப்பான பாஜகவினர் அவர் வந்ததும், படத்தில் நடிக்கப் போங்கள் பசந்தி, நீங்கள் எல்லாம் அரசியலுக்கு லாயக்கில்லை என்று தெரிவித்தனர்.

மன்னிப்பு

மன்னிப்பு

கட்சியினர் கடுப்பாகிவிட்டதை பார்த்த ஹேமா உடனே மன்னிப்பு கேட்டுவிட்டு இனிமேல் குறித்த நேரத்திற்கு பிரச்சாரம் செய்ய வருவதாக வாக்களித்தார்.

கார்

கார்

முதல் நாள் பிரச்சாரத்தின்போதே அவர் 12க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிக்க வேண்டி இருந்தது. பால்சன் கிராமத்திற்கு சென்ற அவர் காரில் இருந்து வெளியே வர மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் காருக்குள்ளேயே இருப்பதற்கு இங்கு எதற்கு வந்தீர்கள் என்று சத்தமிட்டனர். உடனே அவரை திரும்பிச் செல்லுமாறு ஊர் மக்களும், பாஜகவினரும் கோஷமிட்டனர்.

கோவர்தன்

கோவர்தன்

மதுரா மாவட்டத்தில் உள்ள கோவர்தன் நகருக்கு அவர் 4 மணிநேரம் லேட்டாக வந்ததால் ஊர் மக்கள் கோபம் அடைந்தனர். மேலும் அவர் வாக்களித்தபடி ஸ்ரீ கிரிராஜ் ஜி கோவிலில் நடந்த பூஜையிலும் கலந்து கொள்ளவில்லை.

பாஜகவினர்

பாஜகவினர்

பூஜைக்கு ஏற்பாடு செய்து ஹேமமாலினிக்காக காத்திருந்த பாஜகவினர் கோபம் அடைந்து மதுரா மாவட்ட கட்சி தலைவர் டி.பி. கோயலுடன் மோதினர். ஹேமா படங்களுக்கு திரும்பிச் செல்வதே நல்லது என்று பாஜக உறுப்பினர் ஹேமந்த் சர்மா தெரிவித்தார்.

English summary
Hema Malini threw starry tantrums in Mathura while campaigning which was opposed by the people and BJP workers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X