For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக பிரச்சினைகள் பற்றி விவாதிக்கிறார்கள்.. பெங்களூரில் நாளை மே 17 இயக்க ஆலோசனை கூட்டம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: திருமுருகன் காந்தியின் தலைமையிலான மே 17 இயக்கம் சார்பில் பெங்களுரில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

நேற்று ஈழம், இன்று தமிழ்நாடு? என்ன செய்ய போகிறோம்? என்ற தலைப்பில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பான தகவல்களை கர்நாடக பத்திரிகையாளர்களுக்கு அவ்வமைப்பு தெரியப்படுத்தியுள்ளது.

May 17 movement to organize discussion in Bengaluru

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சேலம் எட்டு வழி சாலை, ஹைட்ரோகார்பன் திட்டம், கதிராமங்கலம் எண்ணெய் எடுப்பு, கெயில் பைப்லைன்கள், கடலூரில் பெட்ரோலிய மண்டலங்கள், தேனியில் நியூட்ரினோ, இயற்கை வளங்கள் சுரண்டல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

மத்திய அரசும், தமிழக அரசும் சேர்ந்து போராடுகின்ற மக்களை ஒடுக்கி வருகிறது என்றும் எனவே நாம் என்ன செய்யப் போகிறோம்? என்றும் இந்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

பெங்களூரில் இதற்கான அரங்கக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு 16, ஜெய்பீம் பவன் (கனரா வங்கி SC/ST அசோசியேசன்) முதல் கிராஸ் நியூ மிஷன் ரோடு, ஜேசி ரோடு என்ற முகவரியில் கூட்டம் நடக்கவுள்ளது. இதில் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு கருத்துக்களை விவாதிக்கவுள்ளனர் அடுத்த கட்ட போராட்ட வடிவங்கள் பற்றியும் பேசப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The next move on behalf of the May 17 movement, to discuss with Tamil organizations in Bengaluru.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X