For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சமாஜ்வாதியுடனான கூட்டணி முறிவு- தனித்து போட்டியிடும் பகுஜன் சமாஜ்!

Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபா தேர்தல் படுதோல்வியைத் தொடர்ந்து சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி முடிவெடுத்துள்ளார். விரைவில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடவும் தயாராகி வருகிறது.

லோக்சபா தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் இணைந்து கூட்டணி அமைத்தன. சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் வாக்குகளை இந்த கூட்டணி மொத்தமாக அறுவடை செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.

Mayawati to go solo in bypolls

ஆனால் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக அமைந்தது. சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் மெகா கூட்டணியால் சாதிக்க முடியவில்லை. இதையடுத்து இந்த கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் டெல்லியில் தமது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய மாயாவதி, எதிர்வரும் இடைத்தேர்தல்களில் கூட்டணியை நம்பாமல் தனித்தே வெற்றி பெறுவதற்கான வியூகம் வகுக்க வேண்டும் என கூறியிருக்கிறார். மாயாவதியைப் பொறுத்தவரையில் சமாஜ்வாதி கட்சியின் வாக்குகள் தங்களுக்குக் கிடைக்கவில்லை என கருதுகிறார்.

கெட்டவங்களுக்கு அள்ளி தந்து கைவிடுவான் ஆண்டவன்- ரஜினி டயலாக்கை முன்வைத்து திமுக மீது ஓபிஎஸ் தாக்கு கெட்டவங்களுக்கு அள்ளி தந்து கைவிடுவான் ஆண்டவன்- ரஜினி டயலாக்கை முன்வைத்து திமுக மீது ஓபிஎஸ் தாக்கு

ஆனால் இதனை நிராகரிக்கும் சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள், பகுஜன் சமாஜ் கட்சி எங்களை விட அதிக தொகுதிகளில் வென்றுள்ளனர். ஆகையால் அக்கட்சியின் குற்றச்சாட்டு உண்மை இல்லை என்கின்றனர்.

அகிலேஷ் யாதவின் உறவினரான சிவ்பால்தான், யாதவ் சமூகத்தினரின் பெரும்பான்மை வாக்குகளை பாஜகவுக்கு திசை திருப்பிவிட்டவர். அதை அகிலேஷ்யாதவால் தடுக்க முடியவில்லை என்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

English summary
Mayawati's BJP will go solo in upcoming bypoll elections in UP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X