For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பரூக் அப்துல்லா எங்கே..? வைகோ ஆட்கொணர்வு மனு

Google Oneindia Tamil News

Recommended Video

    Farooq Abdullah | வீட்டை விட்டு வெளியே வந்த ஃபரூக் அப்துல்லா.. அமித் ஷாவிற்கு எதிராக பேட்டி

    சென்னை: தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவுக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

    ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு மாதமாக அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் வெளிநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இதுவரை அனுமதி தரப்படவில்லை. இதேபோல் ராகுல், குலாம் நபி ஆசாத் போன்ற அரசியல் கட்சித் தலைவர்களும் திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    mdmk general secratery vaiko file habeas corpus in supreme court

    அண்மையில் கூட மெகமூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி தனது அம்மாவை பார்க்க உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அனுமதி பெற்றார். இந்நிலையில் பரூக் அப்துல்லாவை தொடர்புகொள்ள முடியவில்லை எனக் கூறி வைகோ உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார்.

    பிராமணர்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள்.. லோக்சபா சபாநாயகர் பிர்லா சர்ச்சை பேச்சுபிராமணர்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள்.. லோக்சபா சபாநாயகர் பிர்லா சர்ச்சை பேச்சு

    அதில் மதிமுக சார்பில் செப்.15-ம் தேதி சென்னையில் நடைபெறும் அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டில் பரூக் அப்துல்லா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்ள ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இந்நிலையில் காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழலால் அவரை தங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.

    வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை உச்சநீதிமன்றம் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    mdmk general secratery vaiko file habeas corpus in supreme court
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X