For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வடகிழக்கு மாநிலங்களில் 2017-க்குள் பாஸ்போர்ட் அலுவலகங்கள் அமைக்க மத்திய அரசு திட்டம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

அகர்தலா: வடகிழக்கு மாநிலங்களில் 2017 ஆம் ஆண்டிற்குள் பாஸ்போர்ட் அலுவலகம் அமைக்கப்பட உள்ளதாக வெளிவிவகாரத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் முகேஷ் குமார் பர்தேஷி தெரிவித்துள்ளார்.

திரிபுரா மாநில தலைநகர் அகர்தலாவில் புதிய பாஸ்போர்ட் அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெளி விவகாரத் துறை இணைச் செயலாளர் முகேஷ் குமார் பர்தேஷி, எல்லா மாநிலங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் பாஸ்போர்ட் அலுவலகங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

MEA says all north eastern states will have passport offices

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் பாஸ்போர்ட் பெறும் வசதி. எளிமையாக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் தொடர்பான அனைத்து தரவுகளும் கணிப்பொறியில் பதவியேற்றம் செய்யப்பட்டுள்ளதால், பாஸ்போர்ட் பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது. ஆன்லைனில் விண்ணப்பித்து பாஸ்போர்ட் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து பாஸ்போர்ட் பெறுவதில் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

English summary
All eight northeastern states -Arunachal Pradesh, Assam, Meghalaya, Manipur, Mizoram, Nagaland, Sikkim and Tripura will have passport offices, the Ministry of External Affairs has said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X