For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதென்ன மணிப்பூருக்கு மட்டும்.. எங்களுக்கும் இன்னர் லைன் பெர்மிட் (ILP) தகுதி வேண்டும்- மேகாலயா

Google Oneindia Tamil News

ஷில்லாங்: இன்னர் லைட் பெர்மித் (ILP) எனப்படும் சிறப்பு நுழைவு அனுமதி திட்டத்தை மணிப்பூருக்கு அளித்த மத்திய அரசு மேகாலயாவுக்கும் அத்தகுதியை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

நாகாலாந்து, மிசோராம், அருணாசலப் பிரதேசம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் இம்மாநிலத்தைச் சாராதவர்கள், இந்திய குடிமக்களாக இருந்தாலுமே சிறப்பு நுழைவு அனுமதி பத்திரம் பெற்ற பிறகே அனுமதிக்கப்படுவர். இப்போதும் இம்மாநிலங்களில் இது நடைமுறையில் உள்ளது.

Meghalaya also demands ILP Status

லோக்சபாவில் குடியுரிமை சட்ட மசோதாவை தாக்கல் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஐஎல்பி அனுமதி தேவை உள்ள மாநிலங்களுக்கு இம்மசோதா பொருந்தாது என்றார். மேலும் மணிப்பூரும் ஐஎல்பி கட்டாயம் என்கிற மாநில பட்டியலில் சேர்க்கப்படும் என அறிவித்தார்.

இதனால் மணிப்பூர் மக்கள் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று அங்கு அரசு விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இதே கோரிக்கையை நீண்டகாலமாக நாங்களும் வலியுறுத்தி வருகிறோம்; ஆகையால் மேகாலயாவுக்கும் இத்தகுதியை வழங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

வாய்ப்பளித்த அமித்ஷாவுக்கு.. நச்சுன்னு வெற்றியை பெற்று கொடுத்து.. நன்றிக் கடன் செலுத்திய எடியூரப்பா வாய்ப்பளித்த அமித்ஷாவுக்கு.. நச்சுன்னு வெற்றியை பெற்று கொடுத்து.. நன்றிக் கடன் செலுத்திய எடியூரப்பா

அஸ்ஸாம், மணிப்பூரில் 60 ஆண்டுகளுக்கு முன்னர் ஐஎல்பி முறை அமலில் இருந்தது. பின்னர் நீக்கப்பட்டது. தற்போது வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் இக்கோரிக்கையை முன்வைத்து வருகின்றன.

ஏற்கனவே குடியுரிமை மசோதாவுக்கு எதிராக ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களும் தீவிரமான போராட்டத்தை நடத்தி வருகின்றன. திரிபுராவில் ஓபிசி ஜாதியினர் தங்களை பழங்குடியினராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்காகவும் சேர்ந்து போராட்டங்களை நடத்துவது குறிப்பிடத்தக்கது.

English summary
Several Meghalaya movements also demanded that the ILP status for the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X