For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேகாலயா முதல்வர் பதவியில் இருந்து முகுல் சங்மா விலகல்

மேகாலயா முதல்வர் தனது பதவியிலிருந்து முகல் சங்மா விலகினார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

ஷில்லாங்: மேகாலயா முதல்வர் முகுல் சங்மா முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவகள் நேற்று வெளியாகின.

Meghalaya CM Mukul Sangma resigns

நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டுள்ளது. மேகாலயாவில் தேர்தல் நடத்தப்பட்ட 59 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 21 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி 19 இடங்களிலும், இதர கட்சிகள் 17 இடங்களிலும் பாஜக இரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஆட்சி அமைக்க 31 இடங்கள் பெரும்பான்மை தேவைப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி 21 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனினும் ஆட்சி அமைக்க ஆளுநர் கங்கா பிரசாத்திடம் உரிமை கோரியுள்ளது.

இந்நிலையில் இங்கு தொங்கு சட்டமன்றம் அமைந்த நிலையில் தேசிய மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு (பிஏ சங்மா கட்சி)/ அல்லது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு அமையவே வாய்ப்புள்ளது.

இன்று ஆளுநர் கங்கா பிரசாத்தை சந்தித்து காங்கிரஸ் முதல்வர் முகுல் சங்மா ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.

English summary
Meghalaya CM Mukul Sangma resigns from his post today. He submits his resignation letter to the Governor Ganga Prasad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X