For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செக்ஸ் புகார் எதிரொலி- மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் ராஜினாமா: பிடிஐ தகவல்

பாலியல் தொந்தரவு புகாரில் சிக்கிய மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் தம்முடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

ஷில்லாங்க்: பாலியல் தொந்தரவு புகாரில் சிக்கிய மேகாலயா ஆளுநரான தமிழகத்தைச் சேர்ந்த சண்முகநாதன் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

மேகாலயா ஆளுநராக 2015-ல் நியமிக்கப்பட்டவர் தமிழகத்தைச் சேர்ந்த சண்முகநாதன். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த பிரமுகர்தான் சண்முகநாதன் என ஊடகங்கள் சுட்டிக்காட்டி வருகின்றன. மேகாலயா ஆளுநராக இருந்த சண்முகநாதன் அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களுக்கு கூடுதல் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.

 Meghalaya Governor V Shanmuganathan resigns: PTI

கடந்த 24-ந் தேதியன்று மேகாலயா ராஜ்பவன் மக்கள் செய்தி தொடர்பாளர் பதவிக்கான நேர்காணலுக்கு வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முதலில் செய்திகள் வெளியானது. இதைத் தொடர்ந்து ராஜ்பவன் ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் 5 பக்க கடிதம் ஒன்றை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைத்திருந்தனர். அதில் 11 விவகாரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

ராஜ்பவனை இளம்பெண்கள் கிளப்பாகவே சண்முகநாதன் மாற்றியது; சின்மோயி தேகா என்ற பெண்ணுடனான நெருக்கம் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் அதில் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து சண்முகநாதன் ராஜினாமா செய்ய கோரி மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் போராட்டங்கள் வெடித்தன.

இந்த நிலையில் சண்முகநாதன், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்று பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

English summary
PTI said that Meghalaya Governor V Shanmuganathan who facing sexual harrasment charges today resigned from the post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X