For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேகாலயாவில் கொரோனாவில் பலியான மருத்துவரை அடக்கம் செய்ய கடும் எதிர்ப்பு

Google Oneindia Tamil News

ஷில்லாங்: மேகாலயாவில் கொரோனாவால் பலியான மருத்துவரை அடக்கம் செய்ய உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது.

வடகிழக்கு மாநிலங்களில் சிக்கிம் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. வடகிழக்கு மாநிலங்களில் மொத்தம் 45 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Meghalaya Locals Block Last Rites Of First Coronavirus Patient

இதில் இருவர் பலியாகி உள்ளனர். ஒருவர் அஸ்ஸாமைச் சேர்ந்தவர். மற்றொருவர் மேகாலயாவின் ஷில்லாங் பெதானி மருத்துவமனையை நிறுவிய மருத்துவர் ஒருவர்.

பெதானி மருத்துவமனை மருத்துவருக்கு கொரோனா நோய் தொற்று எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பாக அம்மாநில அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பெதானி மருத்துவரை அடக்கம் செய்ய உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மலேசியாவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்யும் இந்தியா மலேசியாவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்யும் இந்தியா

பெதானி மருத்துவரை அடக்கம் செய்யக் கூடாது என பழங்குடி மக்களின் பிரதிநிதிகளுடன் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தற்போது இந்த விவகாரத்தில் அம்மாநில முதல்வர் தலையிட்டுள்ளார்.

ஏற்கனவே பெதானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகளில் ஒருவர் கொரோனா அச்சத்தால் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

English summary
The last rites of the doctor who died after contracting coronavirus now facinbg a challenge for the government of Meghalaya.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X