For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேகாலயா சுரங்க தொழிலாளர்களை காப்பாற்ற தீவிரம்... அதி நவீன பம்புகளுடன் களமிறங்கும் மீட்புக்குழு

Google Oneindia Tamil News

Recommended Video

    மேகாலயா குகையில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்

    கவுகாத்தி:மேகாலயாவில் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையின் இறுதிக்கட்ட முயற்சியாக, அதிக விசையழுத்தம் கொண்ட பம்புகள் உதவியுடன் மீட்புக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

    கடந்த 13-ம்தேதியில் இருந்து சுரங்க தொழிலாளர்கள் 15 பேர் சுரங்கத்திற்குள் சிக்கித் தவித்து வருகின்றனர். கடந்த 15 நாட்களாக சுரங்கத்தில் தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், மீட்பு பொருட்களுடன் இந்திய விமானப் படைக்கு சொந்தமான மீட்பு விமானம் மேகாலயா சென்றுள்ளது.

    meghalaya mine collapse: navy divers on the way to join rescue

    அதற்காக, இந்திய விமானப்படையின் விமானம் அங்கு விரைந்திருக்கிறது. முன்னதாக குறைந்த விசையழுத்தம் கொண்ட மோட்டார் பம்புகளை பயன்படுத்தி சுரங்கத்தில் உள்ள நீரை வெளியேற்ற முயற்சிகள் நடந்தன.

    இதேபோன்று அருகில் உள்ள சுரங்கத்திலிருந்தும், ஆற்றில் இருந்தும் நீர் வந்து கொண்டிருப்பதால் எவ்வளவு நீரை வெளியேற்றினாலும் மீண்டும் நீர் நிறைவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறைந்த விசையழுத்தம் கொண்ட மோட்டார் பம்புகளை பயன்படுத்தி நீரை வெளியேற்றும் முயற்சிகள் தோல்வியடைந்ததால் புதிய மீட்பு பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    அதன்படி உயர் விசையழுத்தம் கொண்ட 10 பம்புகளுடன் இந்திய விமானப் படை கவுகாத்தி சென்றுள்ளது. அங்கிருந்து சாலை மார்க்கமாக அந்த பொருட்கள் சுரங்கம் இருக்கும் பகுதிக்கு கொண்டு செல்லப்படும். சுரங்கத் தொழிலாளர்களை மீட்பதற்காக 70 பேர் கொண்ட தேசிய பேரிடர் குழுவும் சம்பந்தப்பட்ட பகுதியில் முகாமிட்டுள்ளது.

    அது தவிர, விசாகப்பட்டினத்தில் இருந்து 15 பேர் கொண்ட அதி நவீன நீச்சல் வீரர்கள் கொண்ட குழுவும் களத்தில் இறங்க இருக்கிறது. மிக விரைவில் அவர்கள் களத்தில் இறங்குவார்கள் என்று மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    English summary
    The navy divers are on the way to rescue the trapped miners in Meghalaya and air force has flown in 10 high capacity pumps.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X