For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேகாலயா சுரங்க விபத்து.. திடீர் திருப்பம்.. 32 நாட்களுக்கு பின் ஒருவரின் உடல் மீட்பு

மேகாலயாவில் பணியாளர்கள் சிக்கி இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து தற்போது ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

ஷில்லாங்: மேகாலயாவில் பணியாளர்கள் சிக்கி இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் தற்போது ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

மேகாலயாவின் ஜெயின்டிஷியா மலையில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில்தான் இந்த விபத்து ஏற்பட்டது. அங்கு இருக்கும் ஜெயின்டிஷியா மலையில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருந்த போது திடீர் என்று சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்தது.

இதனால் கடந்த 12ம் தேதி குகைக்குள் இருந்த 15 பேரும் நீரில் சிக்கினார்கள். இவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

 பெரிய சிக்கல்

பெரிய சிக்கல்

குகைக்குள் சிக்கிய பணியாளர்களை மீட்பது பெரிய சிக்கலாகி உள்ளது. இவர்கள் எப்போது மீட்கப்படுவார்கள் என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. குகைகள் அதிக அளவில் தண்ணீர் இருப்பதால் இவர்களை மீட்பது கடினமான பணியானது.

 அதிகம் ஆனது

அதிகம் ஆனது

அதேபோல் குகைகள் இருக்கும் தண்ணீரின் அளவு வெள்ளம் காரணமாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அங்கு 32 நாட்களுக்கு முன் பணியாளர்கள் சிக்கி இருந்தாலும் யாரையும் மீட்க முடியவில்லை. இந்த குகைக்குள் இருப்பவர்கள் நல்ல ஆக்சிஜனை சுவாசிக்கிறார்களா என்பதே பெரிய சந்தேகம்தான் என்று கூறுகிறார்கள்.

 கண்டுபிடித்தனர்

கண்டுபிடித்தனர்

இடையில் உயர் அழுத்த மோட்டார் இல்லாத காரணத்தால் இந்த மீட்பு பணி கூட 6 நாட்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நிலக்கரி சுரங்கத்தில் தற்போது ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படையின் Underwater Remotely Operated Vehicle எனப்படும் சிறிய ரோபோட் மோட்டார் வாகனம் மூலம் இவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 விரைவில் வாய்ப்பு

விரைவில் வாய்ப்பு

இப்போது இவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மீதம் இருக்கும் 14 பேரின் உடலும் விரைவில் மீட்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் அங்கு இருப்பவர்கள் 32 நாட்களாக எந்த உணவும் உட்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது குகைக்குள் இருப்பவர்கள் உயிரோடு இருப்பது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
Meghalaya Mine Rescue: One body of the worker among 15 trapped found after 32 days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X