For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேகாலயாவில் முதலாவது கொரோனா பாதிப்பு- பரிசோதனையில் மருத்துவருக்கு பாசிட்டிவ்

Google Oneindia Tamil News

ஷில்லாங்: மேகாலயாவில் முதலாவதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Recommended Video

    We will focus on Hotspots in all over India says Modi.

    நாட்டிலேயே வடகிழக்கு மாநிலங்களில்தான் கொரோனாவின் தாக்கம் குறைவாக இருந்து வருகிறது. அதுவும் திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் கடந்த வாரம் வரை கொரோனா பாதிப்பு எதுவும் இல்லாமல் இருந்தது.

    Meghalaya reports first Coronvirus case

    திரிபுராவில் டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய நபர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதேபோல் நாகாலாந்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து நாகாலாந்து நபர், அஸ்ஸாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மேகாலயாவில் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா இருப்பதாக அம்மாநில தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.

    லாக்டவுன் இல்லையெனில் டெல்லியில் 1 லட்சம் பேருக்கு கொரோனா வந்திருக்கும்- அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் லாக்டவுன் இல்லையெனில் டெல்லியில் 1 லட்சம் பேருக்கு கொரோனா வந்திருக்கும்- அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்

    ஷில்லாங்கின் பெதானி மருத்துவமனையை சேர்ந்த மருத்துவருக்கு கொரோனா சோதனையில் பாசிட்டிவ் என தெரியவந்துள்ளதாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மார்ச் 22-ந் தேதிக்குப் பின்னர் பெதானி மருத்துவமனைக்கு சென்றவர்கள் அனைவரும் அரசு நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    English summary
    Meghalaya reported its first coronavirus case after a Shillong doctor tested positive for Coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X