For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராணுவ அதிகாரி மீது வழக்கு.. சட்டவிரோதமாக அனுமதி அளித்த நிர்மலா சீதாராமன்.. சாமி பகீர் புகார்

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: காஷ்மீரில் ராணுவ அதிகாரி மீது வழக்கு பதியப்பட்ட விவகாரத்தில் மெஹபூபா முப்தி, நிர்மலா சீதாராமன் இருவருக்கும் தொடர்பு இருப்பதாக பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டு இருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் ஜம்முவின் சோபியான் பகுதியில் இந்திய ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. அங்கு ஸ்டோன் பெல்டர்கள் நடத்திய தாக்குதலுக்கு எதிர் தாக்குதலாக இந்த நிகழ்வு நடந்தது.

Mehbooba had got illegal ok from Nirmala Sitharaman on FIR against Major: Swamy

இதுகுறித்து விசாரிக்கும்படி ஆணையிட்டார் அம்மாநில முதல்வர் மெஹபூபா முப்தி. இதனால் அந்த ராணுவ அதிகாரிகள் மீது வழக்கு பதியப்பட்டது. இது பெரிய பிரச்சனை ஆனது.

தற்போது இந்த விவகாரத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் தொடர்பு இருக்கிறது என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். அவர் இதுகுறித்து டிவிட் செய்துள்ளார்.

அதில் ''எனக்கு ஜம்முவில் நடத்த பிரச்சனை குறித்த உண்மைகள் தெரியும். மெஹபூபா முப்தி, நிர்மலா சீதாராமனை தொடர்பு பேசி, அவர் சரி என்று சொன்ன பின்பே அதிகாரிகள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்தார்'' என்றுள்ளார்.

இதனால் இந்த பிரச்சனை இன்னும் பெரிதாகி உள்ளது. இதுகுறித்து அந்த ராணுவ அதிகாரியின் தந்தை வழக்கு தொடுத்து இருந்தார்.

இதுகுறித்த வழக்கில் யாரையும் கைது செய்ய கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதேபோல் இந்த வழக்கு குறித்த விசாரணையில் பங்கேற்கும்படி ராணுவ அதிகாரியை உத்தரவிட கூடாது என்றும் கூறியுள்ளனர்.

English summary
Amidst the debate on the FIR lodged against an Army Major in Kashmir, BJP leader, Subramanian Swamy has said that he had reliable information regarding the same.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X