For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கதுவா சிறுமி படுகொலை வழக்கில் 6 பேர் குற்றவாளிகள்- தீர்ப்புக்கு மெகபூபா முப்தி வரவேற்பு

Google Oneindia Tamil News

பதான்கோட்: காஷ்மீரின் கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்து படுகொலை செய்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என பதான்கோட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி வரவேற்றுள்ளார்.

கதுவா சிறுமியை கோவிலில் மறைத்து வைத்து 4 நாட்களாக தொடர்ந்து பலாத்காரம் செய்தனர் காமுகர்கள். சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களை எச்சரிக்கை செய்யவே இப்படியான படுபாதக செயலில் மதவெறியுடன் செயல்பட்டிருக்கின்றனர்.

Mehbooba Mufti welcomes on kathua Verdict

இந்த குற்றவாளிகளில் 2 பேர் போலீசார். இவர்கள்தான் தடயங்களை அழிக்க குற்றவாளிகளுக்கு உதவியவர்களும் கூட. தேசத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த கொடூர செயலுக்கு பாஜகவின் எம்.எல்.ஏக்கள் 2 பேர் ஆதரவு தெரிவித்தனர். இதனால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

உச்சநீதிமன்றம் வரை சென்ற இந்த வழக்கு பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்து இன்று முற்பகல் தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 7 பேரில் 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது.

ஒருவர் இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். குற்றவாளிகள் 6 பேருக்குமான தண்டனை விவரம் இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்பட உள்ளது.

இதனிடையே இச்சம்பவம் நடைபெற்ற போது முதல்வராக இருந்த மெகபூபா முப்தி தீர்ப்பை வரவேற்றுள்ளார். அவர் தமது ட்விட்டர் பதிவில், 8 வயது சிறுமி அநியாயமாக மயக்க மருந்து கொடுத்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை முன்வைத்து அரசியல் செய்ததை நாம் நிறுத்தினோம். தற்போதைய தீர்ப்பு வரவேற்புக்குரியது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் மூத்த பத்திரிகையாளர்கள் பர்காதத், ராஜ்தீப் சர்தேசாய் உள்ளிட்டோர் இத்தீர்ப்பை வரவேற்று ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி பொதுச்செயலர் நடிகை நக்மாவும் இத்தீர்ப்பை வரவேற்று பதிவிட்டுள்ளார்.

English summary
Jammu kashmir former Chief Minister and PDP President Mehbooba Mufti said that, Welcome the judgement. High time we stop playing politics over a heinous crime where an 8 year old child was drugged, raped repeatedly & then bludgeoned to death. Hope loopholes in our judicial system are not exploited & culprits get exemplary punishment, in her tweet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X