For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்த ஜிஎஸ்டி.. என்ன பலன் தெரியுமா?

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பின் மக்கள் மீது மறைமுகமாக விதிக்கப்பட்ட வரிகள் குறைக்கப்பட்டு, மிக குறைத்த அளவில் ஜிஎஸ்டி மட்டும் விதிக்கப்பட்டு வருகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பின் மக்கள் மீது மறைமுகமாக விதிக்கப்பட்ட வரிகள் குறைக்கப்பட்டு, மிக குறைத்த அளவில் ஜிஎஸ்டி மட்டும் விதிக்கப்பட்டு வருகிறது. இது அடித்தட்டு மக்களுக்கும், நடுத்தர வர்க்கத்து மக்களுக்கு பேருதவியாக உள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை காரணமாக மிக அத்தியாவசிய பொருட்களான சோப், பேஸ்ட், எண்ணெய், பிளேடு, ஷாம்பு, பவுடர் ஆகியவைகளின் விலை குறைந்தது. இதன் மீதான வரி 26 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. அதேபோல் காலணிகள் மீதான வரி 10 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டது.

Merits of GST: Modis Tax made a huge impact on people life

உணவுப் பொருட்களிலும் இதேபோல் வரிவிதிப்பு முறை ஜிஎஸ்டி காரணமாக குறைக்கப்பட்டது. நொறுக்குத்தீனிகள் வரி 6ல் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. இட்லி, தோசை மீதான வரி 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைந்தது. அதேபோல் சப்பாத்தி மீதான வரி 12ல் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. மினரல் வாட்டர் மீதான வரி 27ல் இருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. இறுதியாக ஜிஎஸ்டி வடிவமைக்கப்பட்ட பின் கிட்டத்தட்ட 33 சதவிகிதம் பொருட்களின் மீதான வரி குறைந்தது. இது எதிர்காலத்தில் கொள்முதலை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Merits of GST: Modis Tax made a huge impact on people life

பொருளாதாரத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி தனது வலைப்பக்கத்தில் கடந்த ஜூலை 27ம் தேதி எழுதியதன் படி, இந்தியாவில் மொத்தம் 384 அத்தியாவசிய பொருட்களின் விலை மொத்தமாக குறைக்கப்பட்டுள்ளது. மாறாக ஒரு பொருளின் விலை கூட உயர்த்தப்படவில்லை.

[கச்சா எண்ணை விலையேற்றத்திற்கு நடுவேயும், விலைவாசியை கட்டுக்குள் வைத்துள்ள மத்திய அரசு!]

இதற்கு முன் இந்தியாவில் இவ்வளவு பெரிய வரி புரட்சி சுதந்திரத்திற்கு பின் செய்யப்படவில்லை. இதன் மூலம் குறைந்த விலையில் அதிக வருமானம் சாத்தியம் ஆனது. அதேபோல் இறுதியாக வாஷிங் மிஷின், பிரிட்ஜ், வேக்கம் கிளீனர், டீவிக்களின் விலை கூட குறைந்தது. இதன் மீதான வரி 10 சதவிகிதம் வரை குறைந்தது.

Merits of GST: Modis Tax made a huge impact on people life

ஜிஎஸ்டி காரணமாக பொருட்களின் உற்பத்தியும், விற்பனையும் அதிகம் ஆனது. ஜிஎஸ்டி தயாரிப்பை குறிக்கோளாக கொண்டு உருவாக்கப்பட்டது. கஸ்டமர்களை மட்டுமில்லாமல் இடையில் இருக்கும் எல்லோரையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. மொத்தமாக் 0 சதவிகிதம், 5 சதவிகிதம், 12 சதவிகிதம், 18 சதவிகிதம், 28 சதவிகிதம் என்று ஐந்து வகையான ஜிஎஸ்டி வரிக்குறைப்பு செய்யப்பட்டது. ஆனால் பெட்ரோல்,டீசல், மது, மின்சாரம், ஆகியவை ஜிஎஸ்டிக்கு கீழே கொண்டு வரப்படவில்லை. இதற்கு முன் எப்படி இதற்கு மாநில அரசுகள் மூலம் வரி செலுத்தப்பட்டதோ அப்படியே இப்போதும் செலுத்தப்படுகிறது.

English summary
Merits of GST: Modi's Tax made a huge impact on people life.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X