For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

#MeToo பரபரப்பு.. 10 பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்.. சிக்கலில் மத்திய அமைச்சர்!

மேற்கு வங்கத்தை சேர்ந்த பாஜக எம்.பி எம்.ஜே அக்பர் மீது 10 பெண் ஊடகவியலாளர்கள் பாலியல் புகார் அளித்து இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மத்திய அமைச்சர் மீது 10 பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்- வீடியோ

    டெல்லி: மேற்கு வங்கத்தை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எம்.ஜே அக்பர் மீது 10 பெண் ஊடகவியலாளர்கள் பாலியல் புகார் அளித்து இருக்கிறார்கள். இதனால் பாஜகவுக்கு தர்மசங்கடமாகியுள்ளது.

    இந்தியாவில் தற்போது ''மீடூ #MeToo'' என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை பேசுவது வைரல் ஆகியுள்ளது. வரிசையாக பெண்கள் பலர், பிரபலங்கள் குறித்து பாலியல் புகார்களை குவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் தற்போது மூத்த பத்திரிக்கையாளரும், பாஜக எம்பியும், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான எம்.ஜே அக்பர் பாலியல் புகாரில் சிக்கி உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

     யார் இவர்

    யார் இவர்

    எம்.ஜே. அக்பர் ஒரு மூத்த பத்திரிகையாளர் ஆவார். டைம்ஸ் ஆப் இந்தியா, டெக்கான் குரானிக்கல், தி ஆசியன் ஏஜ், டெலிகிராப் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தவர். சொந்தமாகவும் பல பத்திரிகை நிறுவனங்களை நடத்தி வந்தவர்.

     பாஜக எம்பி

    பாஜக எம்பி

    பாஜகவில் இணைந்த இவர் ராஜ்யசபா எம்.பியாக்கப்பட்டார். தற்போது வெளியுறவுத்துறை இணை அமைச்சராக இருக்கிறார். இந்த நிலையில் இவர் மீது சரமாரியான பாலியல் புகார்கள் எழுந்துள்ளன.

    செய்தியாளர் அளித்த புகார்

    பிரபல பத்திரிகையாளர் பிரியா ரமணி, பாஜக எம்.பி எம்.ஜே அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஹோட்டல் அறை ஒன்றில் குளிர்பானம் கொடுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எம்.ஜே அக்பர் மீது பிரியா ரமணி குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார். பலமுறை இப்படி தொந்தரவு கொடுத்ததாக இவர் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.

    10 பேர்

    இவரை தொடர்ந்து மேலும் 9 பெண்கள் எம்.ஜே அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டு மீ டு டேக் மூலம் வைத்து இருக்கிறார்கள். பாலியல் குற்றச்சாட்டு வைத்திருக்கும் 10 பேருமே ஊடகவியலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

     வேலை வாங்கி தருவதாக

    வேலை வாங்கி தருவதாக

    இதில் பல பேருக்கு வேலை தருவதாக கூறி, நேர்முக தேர்விற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தனி ஹோட்டலுக்கு இண்டர்வியூவிற்கு வர வேண்டும் என்று கூறி அழைத்து, பின் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

    {document1}

    English summary
    MeToo against Unino minister MJ Akbar creates storm in Delhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X