For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மிக் 17 ரக ஹெலிகாப்டரின் பிளாக் பாக்ஸ் எங்கே.? நீடிக்கும் மர்மம்.. உள்ளூர்வாசிகள் மீது சந்தேகம்

Google Oneindia Tamil News

பட்காம்: கடந்த பிப்ரவரியில் ஜம்மு காஷ்மீரின் பட்காம் பகுதியில் விபத்தில் சிக்கிய ஐஏஎஃப் மிக் 17 ரக வி5 ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி, எங்கே சென்றது என்பது தற்போது வரை மர்மமாகவே உள்ளது.

புல்வாமாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலியான 40 வீரர்கள் வீர மரணத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை கடந்த பிப்ரவரியில் போர் விமானங்களில் 1000 கிலோ எடை வெடிபொருட்களுடன் சென்று பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை தாக்கியது.

Mi-17 V-5 helicopter crashing .. where is the black box? Search for 2 months

அந்த சமயத்தில் இருநாட்டு எல்லைப் பகுதிகளிலும் பெரும் பதற்றம் நிலவியது. இதனையடுத்து காஷ்மீரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இதனால் ஹெலிகாப்டர் தீப்பிடித்து முற்றிலும் எரிந்தது. இதில் 6 விமானப்படை வீரர்கள் மற்றும் ஒரு கிராமவாசி உயிரிழந்தனர்.

தாம்பரம் - நாகர்கோவிலுக்கு நவீன வசதிகளுடன் கண்ணை கவரும் புதிய ரயில்.. அலைமோதிய மக்கள் கூட்டம்தாம்பரம் - நாகர்கோவிலுக்கு நவீன வசதிகளுடன் கண்ணை கவரும் புதிய ரயில்.. அலைமோதிய மக்கள் கூட்டம்

ஆனால் இந்த விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டியானது தற்போது வரை மீட்கப்படவில்லை. விபத்து நடந்தது முதலே மிக் 17 ரக ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி காணவில்லை. விபத்து நடைபெற்ற பகுதியில் உள்ள பொதுமக்கள் யாரேனும் அதனை எடுத்து சென்றிருக்கலாம் என அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.

எனினும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியிருக்கும் என்றே கருதுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்

விபத்து நடந்த பகுதிக்கு அருகே வசிக்கும் பாத்திமா என்ற பெண்மணி கூறுகையில், பல அதிகாரிகள் வந்து பல முறை தன்னிடம் அந்த டப்பாவை பற்றி விசாரித்து விட்டனர். ஆனால் நான் அது மாதிரியான எந்த டப்பாவையும் பார்க்கவில்லை என நடந்ததை கூறியுள்ளதாக குறிப்பிட்டார்.

தங்கள் கிராமத்திற்கு புதிதாக யார் வந்தாலும் சரி முதலில் அந்த டப்பாவை பார்தீர்களா என்ற கேள்வியை தான் கேட்பதாக சலித்து கொண்டார். இது குறித்து கூறிய விமானப்படை அதிகாரிகள் நிச்சயமாக உள்ளூர் மக்களால் தான் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி திருடப்பட்டுள்ளது.

இதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம் கூடிய விரைவில் கொள்ளை போன கருப்பு பெட்டியை மக்களிடமிருந்து மீட்போம் என நம்பிக்கை தெரிவித்தனர்

English summary
The black box of IAF MiG 17V helicopter, which was crashing in Bhatkam area in Jammu and Kashmir last February, is nowhere to be mysterious.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X