For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடுவானில் ஹோலி டான்ஸ்… மொபைலில் படம் பிடித்த ஸ்பைஸ் ஜெட் விமானிகள்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: நடுவானில் பறக்கும் போது ஹோலி நடனம் ஆடி விமான பாதுகாப்புச் சட்டத்தை மீறியதாக ஸ்பைஸ் ஜெட் விமானத்திற்கு விமான போக்குவரத்து இயக்குநரக ஜெனரல் (டிஜிசிஏ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சன் குழுமத்திற்கும் சொந்தமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் 8 விமானங்களில் ஹோலி கொண்டாடப்பட்டுள்ளது. எஸ் ஜி 876 விமானத்தில் கடந்த மார்ச் 17ம் தேதி ஹோலி கொண்டாடப்பட்டது.

<center><iframe width="100%" height="417" src="//www.youtube.com/embed/MgjHTF0VbBM?autoplay=1&logo=1&hideInfos=0&start=0&syndication=127059&foreground=&highlight=&background="></iframe></center>

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது விமானத்தில் பணிபுரியும் ஊழியர்கள் நடனமாடி பயணிகளை மகிழ்வித்தனர். இதை காக்பிட்டில் இருந்து வெளியே வந்த பைலட்களும் ஒருவர் பின் ஒருவராக வந்து தங்கள் மொபைல் போனில் ரெகார்ட் செய்தனர்.

பயணிகளும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, தங்களின் மொபைல் போனில் பதிவு செய்தனர். விமானப் பணிப் பெண்கள் பலரும் இந்த நடனத்தில் பங்கேற்றனர். இந்த நடனம் யுடுயூப்பில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இது விமான நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு முரணானது. இது போன்று நடனமாடுவதன் மூலம் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்று டிஜிசிஏ குற்றம் சாட்டியுள்ளது. பயணிகளுக்கு பாதுகாப்பற்ற முறைகளை ஏற்படுத்தியதற்காக இரண்டு பைலட்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து கூறியுள்ள ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், ஹோலி நடனம் மொத்தம் 2.5 நிமிடம் மட்டுமே நடைபெற்றது. டிஜிசிஏவின் புகாருக்கும், விசாரணைக்கும் ஒத்துழைப்பு கொடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

English summary
In an unprecedented move, the Directorate General of Civil Aviation (DGCA) has issued a show-cause notice to SpiceJet, asking as to why the airline’s permit should not be suspended after safety violations on board its flights on Holi came to the regulator’s notice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X