For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரபிக் கடலில் விழுந்த மிக் ரக விமானம்.. விமானியை தேடும் பணி தீவிரம்.. உதிரிபாகங்கள் கண்டெடுப்பு

Google Oneindia Tamil News

கோவா: அரபிக் கடலில் விழுந்து விபத்துக்கான மிக் 29 கே பயிற்சி விமானத்தின் உதிரிபாகங்கள் கிடைத்துள்ள நிலையில் அதிலிருந்து மாயமான விமானியை கடற்படை தேடி வருகிறது.

மிக் 29 கே என்பது பயிற்சி விமானமாகும். இந்த விமானத்தில் கமாண்டர் நிஷாந்த் சிங் உள்பட இரு விமானிகள் கோவாவுக்கு பயணம் செய்தனர். இவர்களது விமானம் கடந்த 26-ஆம் தேதி அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

MIG 29 K crash: Debris recovered

இதில் ஒரு விமானி மீட்கப்பட்டார். நிஷாந்த் சிங்கை காணவில்லை. விமானத்தை தேடும் பணியில் இந்திய கடற்படை முடுக்கவிடப்பட்டுள்ளது. இதற்காக 9 போர்க் கப்பல்கள், 14 விமானங்கள், நீரில் மூழ்கி செல்லும் கப்பல்களை கொண்டு தேடும் பணிகள் நடைபெறுகின்றன.

2020- இன் கடைசி சந்திர கிரகணம் இன்று.. 4 மணி நேரம் நீடிப்பு.. இந்தியாவில் தெரியுமா? முழு விவரங்கள்!2020- இன் கடைசி சந்திர கிரகணம் இன்று.. 4 மணி நேரம் நீடிப்பு.. இந்தியாவில் தெரியுமா? முழு விவரங்கள்!

அதுபோல் அருகில் உள்ள மீனவ கிராமங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. விமானியை தேடும் பணியில் கடலோர காவல் படையும் இணைந்துள்ளது.

இந்த நிலையில் விமானத்தின் உடைந்த உதிரிபாகங்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளன. லேண்டிங் கியர், டர்போ சேஞ்சர், எரிபொருள் டேங்க் என்ஜின், கவுலிங் உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன. இதையடுத்து விமானியை தேடும் பணியை கடற்படை தீவிரப்படுத்தியுள்ளது.

English summary
MIG 29 K debris recovered in Arabian Sea. So the Indian Navy searches for missing pilot and it intensifies searching.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X