For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவாவில் நொறுங்கி விழுந்த மிக்-21 கப்பல்படை போர் விமானம்.. தப்பிய விமானிகள்

Google Oneindia Tamil News

Recommended Video

    கோவாவில் நொறுங்கி விழுந்த மிக்-21 கப்பல்படை போர் விமானம்

    பானாஜி: இந்திய கடல்படைக்கு சொந்தமான மிக்-21 கே, ரக போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டபோது, விபத்து ஏற்பட்டு நொறுங்கி விழுந்த சம்பவம் கோவாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடல்படை பைலட்டுகளால், அவ்வப்போது போர் விமானங்களில் பயிற்சி எடுப்பது வழக்கம். இதேபோல, இன்று கோவா மாநிலத்தில் மிக்-21கே போர் விமானங்களை எடுத்துக் கொண்டு இரு பைலட்டுகள் பயிற்சியில் ஈடுபட்டனர். ஆனால் எதிர்பாராதவிதமாக அதன் இன்ஜின் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    MiG-29K fighter aircraft crashed in Goa

    இதை தக்க சமயத்தில் அறிந்து கொண்ட இரு பைலட்டுகளும், பாராசூட் மூலமாக கீழே குதித்தனர். இதனிடையே, விமானம் தீப்பிடித்து நொறுங்கிக் கீழே விழுந்தது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பித்து உள்ளனர்.

    இது குறித்த கடல் படை செய்தி தொடர்பாளர் கூறுகையில், இன்ஜினில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக விமானம் நொறுங்கி விழுந்தது. இதில் பயணித்த கேப்டன் மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் ஆகியோர் குதித்து தப்பினர்.

    விமானத்தின் இன்ஜின் பகுதியில் பறவை மோதியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கான காரணம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    A MiG-29K fighter aircraft crashed in Goa soon after it took off for a training mission, earlier today. Both the pilots managed to eject safely. The aircraft involved in the crash was a trainer version of the fighter jet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X