For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிர்ச்சி.. மூச்சு திணறி திணறியே ரயிலில் உயிரிழந்த தொழிலாளி.. கொரோனா பாசிட்டிவ் வேறு.. பீகார் அவலம்

புலம்பெயர் தொழிலாளி ரயிலில் மூச்சுதிணறி உயிரிழந்துள்ளார்

Google Oneindia Tamil News

பீகார்: ஓடும் ரயிலில் மூச்சுதிணறியே உயிரிழந்துவிட்டார் அந்த தொழிலாளி.. இதையடுத்து அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுத்து பார்த்ததில் பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது பீகாரையே நடுங்க வைத்துள்ளது.

லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட முதல்நாள் தொடங்கிய கண்ணீரும், வலியும் இன்னமும் புலம்பெயர் தொழிலாளர்களை விட்ட பாடில்லை.. ஏதாவது ஒரு ரூபத்தில் அவர்களை விரட்டி கொண்டே இருக்கிறது.. ரத்த காவுகளும், உயிர்பலிகளும் சர்வசாதாரணமாகி கொண்டு வருகின்றன.

 migrant workers: 51 year old worker dies in Bihar railway station

கொளுத்தும் வெயில் பிள்ளை குட்டிகளுடன் கிலோ மீட்டர் கணக்கில் நடந்தே போகிறார்கள்.. இந்த துயர் தாங்காமல் சிறப்பு ரயில்களை மத்திய அரசு ஏற்பாடு செய்தாலும், அப்போதும் இவர்களில் சிலர் பரிதாப மரணத்தையே தழுவி வருவது நிலைகுலைய வைத்து வருகிறது.

குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு, சிகிச்சை தர முடியாமலும், பசியால் அழுதால் பால் வாங்கி தர முடியாததாலும் உயிரிழந்து வருவது நடந்து வருகிறது. அதேபோல, தொழிலாளர்கள் பலர் ரயிலிலேயே சடலங்களாக மீட்கப்பட்டும் உள்ளனர்.

இந்நிலையில், பீகார் மாநிலத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது... காகரியா மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளி, அரியானாவில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.. அவருக்கு வயது 51.. தற்போது வேலையின்மையால், சிறப்பு ரெயிலில் ஏறி தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62 லட்சம் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62 லட்சம்

காகரியா மாவட்டத்தில் உள்ள ரெயில்வே ஸ்டேஷனை நெருங்கியபோது அந்த தொழிலாளிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுவிட்டது.. ஸ்டேஷனில் ரயில் வந்து நிற்பதற்குள் அவரது உயிர் பிரிந்துவிட்டது.. உடனடியாக அவரது சடலமும் கீழே இறக்கப்பட்டு, கொரோனா இருக்குமோ என்ற சந்தேகத்தில் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன.

அது டெஸ்ட்டுக்கும் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது அதிர்ச்சியை தந்து வருகிறது.. அந்த ரயிலில் எத்தனை பேர் இவருடன் பயணித்தார்கள், அவர்களுக்கும் தொற்று ஏற்பட்டிருக்குமா என தெரியவில்லை.. இதையடுத்து, பீகாரில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

Recommended Video

    இறந்து போன நாயை சாப்பிடும் நபர்... வைரலாகும் வீடியோ

    தொடர்ந்து வெளி மாநிலத்தில் சிக்கித் தவித்த தொழிலாளிகள் சொந்த ஊருக்கு செல்லும் வழியில்.. அதுவும் ரயிலிலேயே சிலர் உயிரிழந்து வருவது பெருத்த அதிர்ச்சி, சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.

    English summary
    migrant workers: 51 year old worker dies in Bihar railway station
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X