For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி ஹரியானாவில் லேசான நிலநடுக்கம்- பொதுமக்கள் பீதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி, ஹரியானாவில் இன்று பிற்பகலில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

தலைநகர் டெல்லியில் இன்று மதியம் சுமார் 3 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அரியானா மாநிலத்தில் சாஜியாவாஸ் என்ற இடத்தை மையமாகக் கொண்டு டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் 3.7 ரிக்டர் அளவில் இருந்தது. பூமிக்கு அடியில் 16 கி. மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக குலுங்கின.

Mild tremors felt in Delhi and Haryana

இந்த அதிர்வினார் டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாராப் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைப்பகுதியில் 6.8ரிக்டர் அளவில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் அருகாமையில் உள்ள பாகிஸ்தானிலும், வட இந்தியாவிலும் காணப்பட்டது .

ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், சண்டிகர், ஹரியானா மற்றும் டெல்லியில் நில அதிர்வுகள் ஏற்பட்டன. இந்த கடுமையான நில அதிர்வினால் டெல்லி மெட்ரோ ரயில் சேவை சில நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 என்று பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்.) தெரிவித்தது.

இமாலயப்பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. இந்த நிலநடுக்கம் தலைநகர் டெல்லியில் உணரப்படும். இமயமலைப்பகுதி இந்திய, யுரேசிய கண்டத்தட்டுகள் மோதிக்கொள்ளும் இடமாகும் இது.

யுரேசிய கண்டத்தட்டுக்கு அடியில் இந்திய கண்டத்தட்டு செலுத்தப்படும் ஒரு சக்தி வாய்ந்த நடவடிக்கையே பயங்கர நிலநடுக்கப் பகுதியாக இமாலயம் திகழ்வதற்குக் காரணமாக உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜப்பானில் தொடர்ச்சியாக 3 நாட்கள் நில நடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று இந்திய தலைநகர் டெல்லியில் மிதமான நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Light magnitude 3.7 earthquake shakes Haryana, mild tremors felt in Delhi and NCR region
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X