For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தடுப்பூசி போட்டால் ஆண்மைக் குறைவு.. பழங்குடியின மக்கள் நம்பிக்கை.. அமைச்சர் பகீர் தகவல்

Google Oneindia Tamil News

நாசிக்: தடுப்பூசி குறித்து மக்களிடம் ஆண்மைக் குறைவு ஏற்படுவதாக பழங்குடியின மக்கள் ஒரு வித அச்சம் கொள்வதால் மகாராஷ்டிர மாநில அமைச்சர் சகன் புஜ்பால் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

நாசிக் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. முதல் அலையிலும் இரண்டாவது அலையிலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக அளவு பாதிப்பை கொடுத்து வருகிறது.

பாஜகவின் 3 நியமன எம்.எல்.ஏக்கள்.. பலம் 9 ஆக உயர்வு- ரங்கசாமி அரசுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து! பாஜகவின் 3 நியமன எம்.எல்.ஏக்கள்.. பலம் 9 ஆக உயர்வு- ரங்கசாமி அரசுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து!

முதல் அலையில் தாராவி உள்ளிட்ட நகரங்களில் பெரும் பாதிப்பை கொடுத்தது. தற்போது இரண்டாவது அலையில் நாசிக், நாக்பூர் உள்ளிட்ட இடங்களில் அதிக மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்.

மருத்துவர்கள்

மருத்துவர்கள்

நாசிக் மாவட்டத்தில் கடந்த 9-ஆம் தேதி நிலவரப்படி நாசிக் நகரில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 56 ஆயிரத்து 84 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இறப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 865 ஆக அதிகரித்தது. கொரோனாவை தடுக்க தடுப்பூசி ஒன்றுதான் தீர்வு என மருத்துவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

பிரச்சினை

பிரச்சினை

ஆனால் தடுப்பூசியை போட்டுக் கொள்ள மக்கள் அச்சமடைகிறார்கள். யாராவது தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்நர் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனே தடுப்பூசியால்தான் பாதிப்பு ஏற்பட்டதாக பலர் தவறாக கருதுகிறார்கள்.

மருத்துவர்கள் சொல்வது என்ன

மருத்துவர்கள் சொல்வது என்ன

ஆனால் மருத்துவர்கள் சொல்வது என்னவெனில் தடுப்பூசி போட்டால் பக்க விளைவுகள் ஏற்படத்தான் செய்யும். அவை காய்ச்சல், சளி, உடல் அசதி, உடல் வலி போன்றவைத்தான் ஏற்படும் என்கிறார்கள். இந்த நிலையில் தடுப்பூசி போட்டால்தான் உயிருக்கு உத்தரவாதம் என அரசு கூறி வருகிறது.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

எனினும் தடுப்பூசி போட்டால் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான அச்சம் நிலவி வரத்தான் செய்கிறது. இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில அமைச்சர் சகன் புஜ்பால் செய்தியாளர்களிடம் கூறுகையில் நாசிக் மாவட்டத்தில் சில பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்கள் தடுப்பூசியால் ஆண்மைக்குறைவு ஏற்படுவதாக பயந்து அதை எடுத்துக் கொள்ள அச்சப்படுகிறார்கள். அச்சத்தை புறந்தள்ளி மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

English summary
Maharastra State Minister Chhagan Bhujbal says that people should vaccine without any fear.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X