For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையில் சமைத்தால் என்ன தவறு?.. ம.பி. அமைச்சர் அடேங்கப்பா கேள்வி

Google Oneindia Tamil News

போபால்: அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையில் சமைப்பதில் என்ன தவறு உள்ளது என மத்திய பிரதேச அமைச்சர் இமார்த்திதேவி கேள்வி எழுப்பியுள்ளார்.

போபாலை அடுத்த கரேராவில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு குழந்தைகளுக்கு உணவு சமைத்து வழங்குகின்றனர். சமைக்க இடம் இல்லாததால் கழிவறையில் சமைப்பதாக புகார் எழுந்துள்ளது.

ஆங்காங்கே நோய்வாய்ப்பட்டு குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இதுபோல் ம.பி. அரசு பொறுப்பின்றி செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இடைவெளி

இடைவெளி

இதுகுறித்து மாநில அமைச்சர் இமார்த்திதேவியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையில் சமைப்பது தவறு இல்லை. கழிவறைக்கும் சமைக்கும் இடத்துக்கும் கொஞ்சம் இடைவெளி உள்ளது.

மாநிலங்கள்

மாநிலங்கள்

கழிவறையுடன் இணைந்த குளியலறை இருப்பதால் நமது வீட்டில் உறவினர்கள் சாப்பிட மறுப்பார்களா என அறிவுப்பூர்வமான கேள்வியை எழுப்பியுள்ளார். அங்கன்வாடியில் படிக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவு அளிக்கும் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது.

எண்ணம்

எண்ணம்

இந்த நிலையில் சுத்தம் சோறு போடும் என படிக்கும் குழந்தைகளுக்கு உணவளிக்கும் விஷயத்திலாவது சுத்தம் சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக இருக்கிறது. ஆங்காங்கே காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து வருகிறது.

கோரிக்கை

கோரிக்கை

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் ஒருவர் இதுபோன்று அருவருப்பாக பேசுவது அக்கட்சிக்கு மேலும் மேலும் ஆபத்தை விளைவிக்கும் என்பதே மூத்த தலைவர்களின் கவலையாக உள்ளது. இதனால் கட்சி தலைமை தலையிட்டு இது போன்று சர்ச்சைக்குரிய வகையில் பேசுவோரின் வாய்க்கு பூட்டு போட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகும்.

English summary
Minister Himadri Devi justifies cooking in toilet after getting complaints as Anganwadi workers did this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X