For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாலையில் சென்றவர்தான் காப்பாற்றினார், ஸ்மிருதி அல்ல..... சாலை விபத்தில் பலியான டாக்டர் மகள்

Google Oneindia Tamil News

டெல்லி: யமுனா எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய எனது தந்தையைக் காப்பாற்ற கொஞ்சம் கூட முயற்சிக்கவில்லை அமைச்சர் ஸ்மிருதி இராணி என்பதே உண்மை. சாலையில் சென்றகாரில் இருந்த ஒரு பெண்தான் தனது காரை நிறுத்தி ஆம்புலன்ஸை வரவழைத்தார் என்று கூறியுள்ளார் டாக்டர் ரமேஷ் நாகரின் மகள் சான்டிலி நாகர்.

உ.பி. மாநிலம் மதுராவில் நடந்த பாஜக இளைஞர் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஸ்மிருதி இராணி, யமுனா எக்ஸ்பிரஸ் வே மார்க்கமாக டெல்லி திரும்பிக் கொண்டிருந்தபோது அவரது பாதுகாப்பு கார் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் டாக்டர் ரமேஷ் நாகர் என்பவர் பலியானார். அவரது மகள் சான்டிலி நாகர் காயமடைந்தார். அவரது சகோதரரும் காயமடைந்தார்.

இந்த நிலையில் காயமடைந்த அமைச்சர் ஸ்மிருதி இராணி உதவவில்லை. அவர் வேறு காரை வரவழைத்து அந்த இடத்தை விட்டுப் போய் விட்டார் என்று சர்ச்சை வெடித்துள்ளது. அதை இராணி மறுத்துள்ளார் என்ற போதிலும் விபத்தில் இறந்தவரின் மகள் அமைச்சர் இராணி தங்களுக்கு உதவவில்லை என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் நான் அமைச்சரிடம் போய் கெஞ்சிக் கேட்டும் அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை. மாறாக வேறு ஒரு காரை வரவழைத்து அதில் ஏறிப் போய் விட்டார்.

நாங்கள் பல மணி நேரமாக மருத்துவ உதவி கிடைக்காமல் அல்லாடினோம். அந்தசமயத்தில் சாலையில் சென்ற காரில் பயணித்த பெண் ஒருவர்தான் காரை நிறுத்தி எங்களிடம் பேசினார். ஆம்புலன்ஸையும், போலீஸாரையும் வரவழைக்க உதவினார். பின்னர் தான் எனது தந்தையையும், எங்களையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அமைச்சர் உதவி செய்திருந்தால் எனது தந்தையின் உயிரைக் காத்திருக்கலாம். இன்னேரம் அவர் உயிருடன் இருந்திருப்பார் என்று கூறியுள்ளார் சான்டிலி நாகர்.

English summary
Daughter of the Yamuna expressway accident victim has said that HRD Minister Smirithi Irani didnt' help us, but a person came out of the car that passed by, called up ambulance and police which took them to the hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X