For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் சீக்கிய சிறுவன் தாக்கப்பட்ட விவகாரம்.. இந்திய தூதரகத்திடம் அறிக்கை கேட்ட சுஷ்மா!

சீக்கிய சிறுவன் தாக்கப்பட்ட விவகாரத்தில் சுஷ்மா சுவராஜ் அறிக்கை கேட்டு இருக்கிறார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

டெல்லி : அமெரிக்காவில் சீக்கிய பள்ளிச் சிறுவன் தாக்கப்பட்ட விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இந்திய தூதரக அதிகாரிகள் அறிக்கை அளிக்க அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உத்தரவிட்டுள்ளார்.

வாஷிங்டன் மாகணத்தில் உள்ள கெண்ட் நகரத்தில் உள்ள பள்ளியில் கடந்த 26ம் தேதி, சீக்கிய சிறுவன் ஒருவன் சக மாணவர்களால் தாக்கப்பட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வந்தனர்.

Minister Sushma Swaraj has sought report from Indian Embassy on sikh student attack incident

14 வயதான அந்த சிறுவன், சக மாணவர்களால் பள்ளி வளாகத்திற்கு அருகிலேயே தாக்கப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் குறித்து அந்த சிறுவனின் தந்தை கூறும் போது,இது மிகவும் மோசமான ஒரு சம்பவம். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் தான் தாக்குதல் நடத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகிகள் கூறும்போது, அமெரிக்காவில் எங்குமே இனவெறி பாகுபாடு இல்லை. மாணவர்களுக்குள் ஏற்பட்ட சிறு சண்டையே இதற்கு காரணம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், அந்த பள்ளி மாணவன் தன்னைத் தாக்கியவர்களை இதுவரை பள்ளியிலேயே பார்த்தது இல்லை என்று போலீஸிடம் தெரிவித்து உள்ளார். இதனால் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தருமாறு இந்திய தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்.

English summary
External Affairs Minister Sushma Swaraj on Saturday said she has sought a report from the Indian Embassy in the US following reports of an attack on a Sikh schoolboy in a city in Washington State.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X