For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி: பிரதமர் அலுவலகத்தில் தீ… போலீசார் விசாரணை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 6க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் தரை தளத்தில் இன்று காலை 6.25 மணியளவில் புகை வெளியேறியுள்ளது. இதனையடுத்து இது குறித்து தியணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீ குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 6க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் சென்று தீயை அணைக்க போராடினர் சில நிமிடங்களுக்கு தீ கட்டுப்படுத்தப்பட்டது.

தீ விபத்து காரணமாக அப்பகுதியே புகைமூட்டமாக காணப்பட்டது. தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அலுவலகத்தில் உள்ள யு.பிஎஸ்சில் இருந்து மின் கசிவு ஏற்பட்டதே தீ விபத்துக்கு காரணம் என்று பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். எச்சரிக்கை அலாரம் அடித்த உடன் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து தீயை அணைத்தனர்.

இதனால் எந்த வித காயமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என்றும் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

English summary
A minor fire was reported in the premises of the Prime Minister's Office in South Block early morning, Delhi Fire Service said
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X