For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மிஸ் ஆசியா பசிபிக் அழகி ராணாவின் மகுடம் டம்மி பீஸாம்!!!

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: மிஸ் ஆசியா பசிபிக் அழகிப் பட்டம் வென்ற ஷ்ரிஷ்டி ராணாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மகுடம் போலி என்று தெரிய வந்துள்ளது.

கொரியாவில் நடந்த மிஸ் ஆசியா பசிபிக் அழகி போட்டியில் இந்தியாவின் ஷ்ரிஷ்டி ராணா பட்டம் வென்றார். அவர் சியோலில் இருந்து கிளம்பி மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கினார். அப்போது அவர் சுங்க வரி கட்டவில்லை என்று கூறி அவரது மகுடத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Miss Asia Pacific World Srishti Rana’s crown is fake!

மகுடத்தில் வைர கற்கள் இருப்பதால் அதை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ராணா வரியை கட்டிவிட்டு மகுடத்தை எடுத்துச் செல்லலாம் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் மகுடத்தின் மதிப்பை கணக்கிட்டபோது தான் அது போலி என்பது தெரிய வந்துள்ளது. அதில் இருப்பது வைரங்கள் அல்ல மாறாக வெறும் கண்ணாடி கற்கள் என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து மகுடத்தை அதிகாரிகள் ராணாவிடம் திருப்பிக் கொடுத்துவிட்டனர்.

English summary
The crown that was confiscated from Srishti Rana, who had won Miss Asia Pacific World 2013 pageant, is found out to be fake.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X