For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நைஜீரிய மாணவிகளை மீட்பதற்காக கைகோர்த்த இந்திய அழகிகள்

Google Oneindia Tamil News

டெல்லி: கடத்தப்பட்ட நைஜீரிய மாணவிகளை மீட்கும் ‘பிரிங் பேக் அவர் கேள்ஸ்' பிரச்சார முயற்சிக்காக இந்திய அழகிகள் சிலர் ஒன்றாக இணைந்துள்ளனர்

கடந்த மாதம் 14ம் தேதி நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாநிலம் சிபோக் கிராமத்தின் பள்ளியில் இருந்து 200 சிறுமிகளை போகோ ஹரம் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். சிறையில் உள்ள தங்களது இயக்கத்தவர்களை விடுதலை செய்யாவிட்டால் கடத்தப்பட்ட சிறுமிகளை பாலியல் அடிமைகளாக விற்க இருப்பதாக போகோ ஹரம் மிரட்டி வருகிறது.

போகோ ஹரமின் கோரிக்கையை நிராகரித்த நைஜீரியா இப்பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடத்தப்பட்ட மாணவிகளை பத்திரமாக மீட்கும் பணியில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகள் நைஜீரியாவுடன் இணைந்துள்ளன.

இதுபோக, பல்வேறு அமைப்புகளும் மாணவிகளை விடுவிக்கக் கோரி போராடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் ‘பிரிங் பேக் அவர் கேர்ள்ஸ்' என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. அந்தவகையில், இந்திய அழகிகள் சிலர் நைஜீரிய மாணவிகளை விடுவிக்கக் கோரி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

ஸ்ருதி ராணா...

ஸ்ருதி ராணா...

கடந்த 2013ம் ஆண்டுக்கான மிஸ். ஆசியா பசிபிக் பட்டம் வென்ற ஸ்ருதி ராணா, ‘பிரிங் பேக் அவர் கேர்ள்ஸ்' பிரச்சாரத்தில் இணைந்துள்ளார்.

கோயல் ராணா...

கோயல் ராணா...

இவர் இந்தாண்டுக்கான மிஸ்.இந்தியா வேர்ல்ட் பட்டம் பெற்ற கோயல் ராணா. இவரும் நைஜீரிய மாணவிகளை மீட்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அனுக்கிரிதி...

அனுக்கிரிதி...

கடந்தாண்டுக்கான பெமினா மிஸ் இந்தியா டெல்லி பட்டத்தை தட்டிச் சென்ற அனுக்கிரிதி ஷுசைன், நைஜீரியா மாணவிகளை மீட்கும் பிரச்சாரத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார்.

பிரியா டிசெல்வா...

பிரியா டிசெல்வா...

இவர் கடந்தாண்டு மிஸ் இந்தியா புனே பட்டம் பெர்ற பிரியா டிசெல்வா. இவரும் நைஜீரிய மாணவிகளை மீட்கும் பணிக்காக தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

ஜான்டீ...

ஜான்டீ...

2014ம் ஆண்டு பெமீனா மிஸ் இந்தியா போட்டியின் டாப் 10 அழகிகளில் ஒருவராக இடம் பிடித்தவரான ஜான்டீ ஹஸாரிகா, ‘பிரிங் பேக் அவர் கேர்ள்ஸ்' பிரசாரத்திற்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

மாலதி...

மாலதி...

அதேபோல், மற்றொரு இறுதிச்சுற்றில் உள்ள அழகியான மாலதி சகாரும் நைஜீரிய மாணவிகளுக்கான பிரச்சாரத்தில் இணைந்துள்ளார்.

மேதினி...

மேதினி...

நைஜீரிய மாணவிகளை மீட்கும் இந்தப்பிரச்சாரத்தில் மற்றொரு பெமினா மிஸ் இந்தியா 2014 போட்டியின் இறுதிச்சுற்று அழகியான மேதினி இகூரும் கைகோர்த்துள்ளார்.

English summary
It's now been nearly a month since 200 young Nigerian schoolgirls were abducted from their school classroom by notorious terror group Boko Haram. A social media campaign to help bring awareness to the girls has been growing momentum in recent weeks, with #BringBackOurGirls trending worldwide. Femina Miss India winners; Koyal Rana, Femina Miss India World 2014 and Srishti Rana, Miss Asia Pacific 2013 have come together to support this campaign to raise awareness.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X