For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சசி தரூரின் "சில்லறை" கமென்ட்... ப்ரீயா விடு மாமு என ஈசியாக எடுத்துக் கொண்ட மனுஷி!

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கிண்டல் செய்யும் விதமாக சசி தரூர் தெரிவித்த கருத்தை உலக அழகி மனுஷி சில்லார் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    உலக அழகி பட்டம் வாங்கிய மனுஷி சில்லருக்கு இவ்வளவு திறமையா!-வீடியோ

    சண்டீகர்: பாஜகவின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கிண்டல் செய்யும் விதமாக தனது பெயரில் உள்ள சில்லர் என்பதை சில்லறை என்று சசி தரூர் தெரிவித்த கருத்து தமக்கு வேதனையை ஏற்படுத்தவில்லை என்று உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மனுஷி சில்லார் தெரிவித்துள்ளார்.

    ஹரியானா சேர்ந்த மனுஷி சில்லார். இவர் சீனாவில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவை சேர்ந்த ஒருவர் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    சில்லாருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் என பலதரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர், தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    சசி தரூர் என்ன கூறினார்

    What a mistake to demonetise our currency! BJP should have realised that Indian cash dominates the globe: look, even our Chhillar has become Miss World!

    அவர் தனது பதிவில் நமது பணத்தை மதிப்பிழக்க செய்தது எத்தகைய தவறு. ஆனால் நமது இந்திய சில்லறை உலகத்தையே ஆதிக்கம் செலுத்தியிருப்பதை பாஜக தற்போது உணர்ந்திருக்கும். பாருங்களேன் சில்லறை கூட உலக அழகியாகிவிட்டது என்று அந்த பெண்ணின் குடும்ப பெயரை கிண்டல் செய்யும் வகையில் கருத்து பதிவிட்டிருந்தார். இதற்கு தேசிய மகளிர் ஆணையத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

     நோக்கம் அதுவல்ல

    நோக்கம் அதுவல்ல

    இதையடுத்து சசி தரூர் மன்னிப்பு கேட்டு இன்னொரு பதிவை பதிவு செய்திருந்தார். அதில் சில்லர் குறித்து நான் விளையாட்டாக கூறிவிட்டேன். அந்த பெண்ணை புண்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. உலக அழகி போட்டியில் கடைசியாக சில்லாரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலை நான் தனியாக பாராட்டியுள்ளேன். எனவே ஈசியாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.

     ஒருங்கிணைப்பாளர்

    ஒருங்கிணைப்பாளர்

    இதுகுறித்து மிஸ் இந்தியா போட்டியின் ஒருங்கிணைப்பாளர் ஜெயின் தனது டுவிட்டரில், மனுஷி சில்லார் குறித்து சசி தரூரின் டுவீட்டை நான் பார்த்தேன். கிண்டல் பதிவுகளை சகித்து கொள்ள நாம் கற்க வேண்டியது இன்னும் ஏராளம் உள்ளது என்று பதிவிட்டிருந்தார்.

     மனுஷி சில்லார் பதிவு

    மனுஷி சில்லார் பதிவு

    மிஸ் இந்தியா ஒருங்கிணைப்பாளரின் டுவீட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் உலக அழகியாக தேர்ந்தேடுக்கப்பட்ட சில்லார் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் ஜெயின் சாரின் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். உலகையே வென்ற ஒரு பெண் இதுபோன்ற கிண்டல் கருத்துகளால் வேதனை அடைய போவதில்லை. சில்லரை என்ற பெயரில் சில் என்று இருப்பதையும் நாம் மறக்க வேண்டாம் என்று சசி தரூரின் டுவீட்டை தான் ஈஸியாக எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

    English summary
    Miss World 2017 Manushi Chhillar on Monday said she was not upset that Congress leader Shashi Tharoor referred to her as “chillar”, which means small change.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X