For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

15 ஆண்டுக்கு முன்பு என்கவுன்ட்டரில் ம.பி.யை கலக்கிய மணீஷ் மிஸ்ரா.. இன்று பிச்சை எடுக்கும் அவலம்

Google Oneindia Tamil News

போபால்: 15 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன என்கவுன்ட்டர் புகழ் மணீஷ் மிஸ்ரா, குவாலியல் வீதிகளில் பிச்சை எடுத்து வரும் காட்சி மனதை உருகுகிறது.

மணீஷ் மிஸ்ரா கடந்த 1999ஆம் ஆண்டு மத்திய பிரதேச காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணிக்கு சேர்ந்தார். 1999 ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளர் பணியில் சேர்ந்த 250 பேரில் சிறந்த தடகள வீரராகவும் துப்பாக்கியை குறி பார்த்து சுடுவதிலும் வல்லவராக இருந்தார்.

இவர் முன்னாள் காவல் துறை அதிகாரியின் மகனாவார். மணீஷ் மிஸ்ரா தனது பணியின் போது என்கவுன்ட்டரையும் நடத்தியுள்ளார். இவர் 2005-ஆம் ஆண்டு தாட்டியா மாவட்டத்தில் கடைசியாக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

உழைத்தது போதும்... ஆளை விடுங்க சாமி... பாஜகவிலிருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர்..!உழைத்தது போதும்... ஆளை விடுங்க சாமி... பாஜகவிலிருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர்..!

டிஎஸ்பிக்கள்

டிஎஸ்பிக்கள்

இதையடுத்து திடீரென மணீஷ் மிஸ்ராவை கடந்த 15 ஆண்டுகளாக காணவில்லை. இந்த நிலையில் கடந்த 11-ஆம் தேதி தேர்தல் பணிக்காக ரோந்து பணியில் காவல் துறை துணை கண்காணிப்பாளர்கள் (டிஎஸ்பி) ரத்னேஷ் சிங், விஜய் சிங் பதேரியா ஆகியோர் ஒரு பிச்சைக்காரர் குளிரில் நடுங்கி கொண்டிருந்தார்.

காலணி

காலணி

அவருக்கு இருவரும் உதவ முன் வந்தனர். கிழிந்த கந்த உடை, அழுக்கான தோற்றம், தாடி, மீசையுடன் தோற்றம் அளித்த பிச்சைக்காரரின் நிலையைப் பார்த்து தங்களுடைய ஜாக்கெட் ஒன்றையும் காலணியையும் அவருக்கு அந்த அதிகாரிகள் வழங்கினார்கள்.

மனநிலை சரியில்லை

மனநிலை சரியில்லை

பிறகு அங்கிருந்து புறப்படும்போது இருவரையும் பார்த்து அந்த பிச்சைக்காரர் பெயரிட்டு அழைத்ததும் அவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அவரிடம் சென்று விசாரித்ததில் அவர் மணீஷ் மிஸ்ரா என தெரியவந்தது. காவல் பணியில் இருந்த போது திடீரென அவருக்கு மனநிலை சரியில்லை என கூறப்பட்டது.

தங்குமிடம்

தங்குமிடம்

இதையடுத்து பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மனநலக் காப்பகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் அவ்வப்போது காணாமல் போனது தெரியவந்தது. அது போல் அவர் ஒரு முறை காணாமல் போன நிலையில் அவரை உறவினர்கள் தேடியும் கிடைக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து அவரை ஆதரவற்றோர் தங்குமிடத்தில் சேர்த்துள்ளனர்.

15 ஆண்டுகள்

15 ஆண்டுகள்

மன ரீதியாக மணீஷ் மிஸ்ரா பாதிக்கப்பட்டது ஏன், அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்தெல்லாம் தெரியவில்லை. 15 ஆண்டுகளுக்கு முன்பு காவல் துறை ஏன் அவரை கைவிட்டது என்ற கேள்விகளுக்கு விடைத் தெரியவில்லை. அவரது குடும்பத்தினரிடம் கேட்டால் மட்டுமே இந்த கேள்விகளுக்கு விடைத் தெரியும்.

English summary
Missing Madhya Pradesh police Manish Mishra found begging after 15 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X