For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தலில் வென்ற ஹேமமாலினி, மூன்முன் சென்… தோல்வியை தழுவிய ஜெயப்பிரதா, நக்மா, ரம்யா

By Mayura Akilan
|

டெல்லி: லோக்சபா தேர்தல் களத்தில் நாடுமுழுவதும் நட்சத்திரப்பட்டாளங்கள் களமிறங்கினர்.

பாஜக, காங்கிரஸ், திரினாமுல்காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பல கட்சி சார்பாகவும் நட்சத்திர பட்டாளங்கள் களமிறங்கினர்.

இதில் பாஜக சார்பில் போட்டியிட்ட நட்சத்திரங்கள் வெற்றி பெற்று எம்.பிக்களாக நாடாளுமன்றத்திற்குள் நுழையப்போகின்றனர்.

அதேசமயம் மேற்குவங்கத்தில் வீசிய மமதா அலையால், அங்கு பாஜக சார்பில் போட்டியிட்ட நட்சத்திரங்கள் தோல்வியை தழுவினர்.

தென்மாநிலங்களில் பிரபல நடிகைகளாக திகழ்ந்த நக்மா, ரம்யா ஆகியோர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வீசிய அலையில் வீழ்ந்த நட்சத்திரங்கள் ஆவர்.

வெற்றிக்கனியை பறித்த நட்சத்திரங்கள் யார்?யார்? தோல்வியை தழுவிய நட்சத்திரங்கள் யார் யார்? மேற்கொண்டு படியுங்களேன்.

சத்ருகன்சின்கா, வினோத்கன்னா

சத்ருகன்சின்கா, வினோத்கன்னா

பாஜக சார்பில் போட்டியிட்ட இந்தி நடிகர்கள் வினோத் கன்னா, சத்ருகன்சின்கா, ஆகியோர் குருதாஸ்பூர் (பஞ்சாப்), பாட்னா சாகிப் (பீகார்) ஆகிய தொகுதிகளில் முறையே வெற்றி பெற்றனர்.

டெல்லி வட கிழக்கு தொகுதியில் போஜ்பூரி நடிகர் மனோஜ் திவாரியும், கிழக்கு அகமதாபாத் தொகுதியில் (குஜராத்), இந்தி குணச்சித்திர நடிகர் பரேஷ்ராவலும் வெற்றியை ருசித்தனர்.

ஹேமாமாலினி

ஹேமாமாலினி

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் முதல் பெண் வேட்பாளராக நடிகை ஹேமமாலினி தேர்வு பெற்றார். சண்டிகாரில் கடும் உள்கட்சி பூசலுக்கு மத்தியில் இந்தி நடிகை கிரண்கேர் முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலை தோற்கடித்தார். இவர்கள் 6 பேரும் பா.ஜனதா சார்பில் வெற்றி பெற்ற நட்சத்திரங்கள் ஆவார்கள்.

மூன் மூன் சென்

மூன் மூன் சென்

பிரபல இந்தி நடிகை மூன் மூன் சென் மேற்கு வங்க மாநிலம் பன்குரா தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஸ்மிருதி இரானி

ஸ்மிருதி இரானி

பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த நட்சத்திரங்களில் டி.வி. நடிகை ஸ்மிருதிராணி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ராகுல் காந்தியை எதிர்த்து அவர் அமேதி தொகுதியில் போட்டியிட்டார்.

மேஜிக் நிபுணர் பி.சி.சர்க்கார்

மேஜிக் நிபுணர் பி.சி.சர்க்கார்

பாலிவுட் இசை அமைப்பாளர் பப்பிலஹரி ஸ்ரீராம்பூர் தொகுதியில் (மேற்கு வங்காளம்) பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இவரும் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதே போல் பாஜக சார்பில் களத்தில் நின்ற மேஜிக் நிபுணர் பி.சி. சர்காரும் தோல்வியை தழுவினார்.

ராணுவத்தளபதியிடம் தோற்ற ராஜ்பாப்பர்

ராணுவத்தளபதியிடம் தோற்ற ராஜ்பாப்பர்

காங்கிரஸ் சார்பில் உத்தரபிரதேச மாநிலம் காஜியா பாத்தில் போட்டியிட்ட நடிகர் ராஜ்பாப்பர் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ தளபதி வி.கே. சிங்கிடம் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றார்.

நக்மா- ரம்யா

நக்மா- ரம்யா

நடிகை நக்மா உ.பி. மாநிலம் மீரட் தொகுதியில் தோற்றார். இதேபோல கர்நாடக மாநிலம் மாண்டியாவில் போட்டியிட்ட ரம்யாவும் தோல்வியை தழுவினார்.

இதே போல காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட போஜ்புரி நடிகர் ரவிகிஷன், குணால்சிங் ஆகியோரும் தோற்றனர்.

ஜெயப்பிரதா

ஜெயப்பிரதா

இதேபோல் நடிகை ஜெயப்பிரதா (ராஷ்ட்டீரிய லோக் தளம்), குல்பனாக் (ஆம் சூத்மி) பாலிவுட் இயக்குனர் பிரகாஷ்ஜா (ஐக்கிய ஜனதா தளம்)

ராக்கிசவாந்த்

ராக்கிசவாந்த்

நடிகர் ஜாவித் ஜபேரி (ஆம் ஆத்மி), கவர்ச்சி நடிகை ராக்கி சவாந்த் ஆகியோர் தோல்வியை தழுவினார்கள்.

விஜயசாந்தி

விஜயசாந்தி

தெலுங்கானா மாநிலம் மேடக் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட விஜயசாந்திக்கு மக்கள் தோல்வியை பரிசளித்தனர்.

ரோஜா

ரோஜா

அதேசமயம் நகரி சட்டமன்றத் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்கட்சி சார்பில் போட்டியிட்ட ரோஜா வெற்றிக்கனியை ருசித்துள்ளார்.

English summary
The film fraternity had mixed luck at the hustings with BJP nominees Hema Malini, Kirron Kher and Paresh Rawal, Trinamool's Monmoon Sen and Independent candidate Innocent making their Lok Sabha debut while some like Raj Babbar, Nagma, Gul Panag and Jaya Prada bit the dust.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X