For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

1 கிலோ அரிசி ரூ.1, மிசோ மொழிக்கு அதிகாரம்.. மிசோரம் தேர்தலில் திமுகவை பின்பற்றும் பாஜக!

மிசோரம் மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக கட்சி தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

ஐசால்: மிசோரம் மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக கட்சி தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு இருக்கிறது. இந்த வாக்குறுதி பட்டியலில் இருக்கும் பல விஷயங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் இருப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா முழுக்க ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் அடுத்தடுத்து நடந்து வருகிறது. நேற்றுதான் சட்டிஸ்கர் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இன்னும் தெலுங்கானா, மத்திய பிரதேம், மிசோரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது.

Mizoram assembly elections 2018: BJP releases its manifesto

இதில் மிசோரம் தேர்தலுக்காக காங்கிரஸ் மற்றும் பாஜக மிகவும் தீவிரமாக அங்கு பிரச்சாரம் செய்து வருகிறது. அங்கு நவம்பர் 28ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

இதனால் இன்று ஒரே நாளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் அங்கு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அங்கு தற்போது பாஜக தனது தேர்தல் வாக்குறுதி அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.

பாஜகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பெரிய கவனத்தை பெற்றுள்ளது. அதே சமயம் இந்த தேர்தல் வாக்குறுதியில் பல முக்கியமான விஷயங்கள் இங்கு தமிழ்நாட்டில் திமுக கொடுத்து நிறைவேற்றிய பழைய வாக்குறுதிகள் ஆகும். சில வாக்குறுதிகள் அதிமுக மூலம் நிறைவேற்றப்பட்டவை ஆகும்.

திராவிட கட்சிகளின் வாக்குறுதி திட்டங்களை பாஜக அங்கு பின்பற்றியுள்ளது, பின்வரும் உதாரணங்கள் மூலம் தெளிவாக தெரிகிறது.

1. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் என்று பாஜக கூறியுள்ளது. தமிழகத்தில் அந்த திட்டம் நடைமுறையில் உள்ளது.

2.மிசோரம் மக்கள் பயன்படுத்தும் மிசோ மொழி அரசு மொழியாக பயன்படுத்தப்படும், மேலும் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் 8ல் அந்த மொழி சேர்க்கப்படும் என்று கூறியுள்ளது.

3. மருத்துவ கல்லூரிகள், மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று கூறியுள்ளது.

4. உழவர் சந்தைகள் போலவே அங்கும் அரசு காய்கறி மார்க்கெட் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

5. மேலும் பெண்கள் கடன் பெற வசதியாக குழுக்கள் உருவாக்கப்படும் என்றுள்ளது.

இதில் பல திட்டங்கள் ஏற்கனவே தமிழகத்தில் கொண்டு வரப்பட்டது ஆகும். அங்கு மொத்தம் 40 தொகுதிகள் உள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லால் தன்ஹாலா ஆட்சி முடிவிற்கு வந்ததை அடுத்து அங்கு தேர்தல் நடக்கிறது. அங்கு இதுவரை பாஜக வெற்றிபெற்றதே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Mizoram assembly elections 2018: BJP releases its manifesto.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X