For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மிசோரத்தில் ஹாட் டிரிக் அடிக்க திட்டமிடும் காங்கிரஸ்.. ஆனா வரலாறு சாதகமா இல்லையே!

Google Oneindia Tamil News

Recommended Video

    மத்திய பிரதேசம், மிசோராமில் இன்று வாக்கு பதிவு- வீடியோ

    ஐசால்: மிசோரம் மாநிலத்தில் மாநில கட்சிகளை மீண்டும் தோற்கடித்து வெற்றிவாகை சூடும் திட்டத்தில் காங்கிரஸ் செயலாற்றி வருகிறது. இதற்கு முன் நடந்த தேர்தல்களும் அதையே நிரூபித்து இருக்கிறது.

    அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் வரிசையாக அடுத்தடுத்து நடந்து வருகிறது. ஏற்கனவே சட்டிஸ்கர் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.

    மத்திய பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் இன்று தேர்தல் நடக்கிறது. இன்னும் தெலுங்கானா, ராஜஸ்தான் ஆகிய 2 மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இதில் மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ், மாநில கட்சிகள் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

    எப்படி சூழ்நிலை

    எப்படி சூழ்நிலை

    மிசோரமில் பாஜக வலுவான கட்சி கிடையாது. ஆனால் காங்கிரஸ் அங்கு மிகவும் வலுவான கட்சியாக உள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லால் தன்வாலா 10 வருடமாக ஆட்சி செய்து வருகிறார். அங்கு இருக்கும் 40 தொகுதிகளுக்கும் இப்போது தேர்தல் நடந்து வருகிறது. காங்கிரஸ் பாஜக இல்லாமல் மிசோரம் தேசிய முன்னணி, மிசோரம் ஜனநாயக கூட்டணி ஆகியவை அதிக பலத்துடன் இருக்கிறது.

    இதற்கு முன் தேர்தல்

    இதற்கு முன் தேர்தல்

    2013ல் அங்கு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றிபெற்றது. 40 தொகுதிகளில் மொத்தம் 142 வேட்பாளர்கள் அனைத்து கட்சிகளின் சார்பாக நிறுத்தப்பட்டனர். 40ல் மொத்தம் 34ல் காங்கிரஸ் வென்றது. 5 தொகுதியில் மிசோரம் தேசிய முன்னணியும், 1ல் மிசோரம் மக்கள் முன்னணியும் வென்றது . இந்த முறை நடக்கும் தேர்தலிலும் இப்படி வெற்றி பெற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் மிசோராமில் காங்கிரஸ் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக வாக்குகளை இழந்து வருகிறது. 2008 தேர்தலில் காங்கிரஸ் 44.63 சதவிகித வாக்குகளை பெற்றது. மிசோரம் தேசிய முன்னணி 28.65 சதவிகிதம் பெற்றது. ஆனால் 2013ல் காங்கிரஸ் 38.89 சதவிகித வாக்குகளை பெற்றது. மிசோரம் தேசிய முன்னணி 30.65 சதவிகிதம் பெற்றது. இந்த வித்தியாசம் இன்னும் அதிகரித்தால் இந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைய கூட வாய்ப்புள்ளது. இந்த வரலாறு காங்கிரஸ் கட்சிக்கு சோதனையாக இருக்கலாம்.

    மதம் முக்கிய பங்கு

    மதம் முக்கிய பங்கு

    இந்த தேர்தலில் மிசாரமில் மதமும் முக்கிய பங்கு வகிக்கிறது. மதம் சார்ந்து வாக்குகள் பிரிய நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. கிறிஸ்துவர்கள் 956,331 (87.16 %), புத்த மதத்தினர் 93,411 (8.51 %), இந்துக்கள் 30,136 (2.75 %), இஸ்லாமியர்கள் 14,832 (1.35 %) என்ற விகிதத்தில் அங்கு வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதுவும் இந்த தேர்தலில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும்.

    English summary
    With polling for the 40 seats Mizoram assembly set to be held tomorrow, it is worth recalling what happened in the previous 2013 elections in the north eastern state. In 2013, Congress swept the polls by winning 34 of the 40 seats in the Mizoram Assembly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X