For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மிசோரம் பரிதாபம்.. சுயேட்சை வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார் முதல்வர் லால் தன்வாலா!

Google Oneindia Tamil News

Recommended Video

    மிசோரம் பரிதாபம்: முதல்வர் லால் தன்வாலா தோல்வி அடைந்தார்- வீடியோ

    அய்ஸ்வால் : மிசோரம் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரும், முதலமைச்சருமான லால் தன்வாலா தோல்வியடைந்தார்.

    2 தொகுதிகளில் போட்டியிட்ட அவர், செர்சிப் தொகுதியில், சுயேட்சை வேட்பாளர் லால்நுன்லுங்காவிடம் தோல்வியை தழுவி உள்ளார். மொத்தம் பதிவான வாக்குகளில் அவர், 283 வாக்குகள் வித்தியாசத்தில் லால் நன் துலங்காவிடம் வெற்றியை பறிகொடுத்தார். மற்றொரு தொகுதியான சம்பாயிலும் அவர் தோல்வி அடைந்தார்.

    Mizoram Chief Minister Lal Thanhawla defeated

    மொத்தமுள்ள 40 தொகுதிகளில் தற்போது வரை ஆளும் காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மாநில கட்சியான மிசோரம் தேசிய முன்னணி 27 இடங்களிலும், பாஜக 1 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகிறது.

    Mizoram Chief Minister Lal Thanhawla defeated

    மொத்தம் பதிவான 80 சதவீத வாக்குகளில் மிசோ தேசிய முன்னணி 38 சதவீதம் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 30.7 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.

    ஆட்சி பறிபோன நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியில் தோல்விக்கு யார் காரணம் என்ற வார்த்தை போரும் தொடங்கி உள்ளது. அம்மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான மலியானா, மிசோரம் மக்கள் இயக்கத்தை குற்றம்சாட்டி உள்ளார். பழமையான காங்கிரஸ் கட்சியை அந்த இயக்கம் தோற்கடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

    English summary
    Mizoram assembly eletion results are now cleared, Mizo National Front going to form government and congress losses in the battle. CM lal thanhawala defeated by an independant candidate.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X