For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எந்த ஆளுநருக்கும் இப்படி ஒரு நிலை வரக்கூடாது.. குடியரசு தினத்தன்று மிசோராமில் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

கொல்கத்தா: நாட்டின் 70 வது குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சியில் மிசோரம் மாநில ஆளுநர் கும்மனம் ராஜசேகருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

மிசோரம் தலைநகர் ஐஸ்வால் நகரில் உள்ள மைதானத்தில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அதிர்ச்சி என்னவென்றால் பொதுமக்கள் யாருமே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

Mizoram Governor addresses empty ground in Republic Day event

அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மட்டுமே இதில் பங்கேற்றனர். எனவே மைதானமே வெறிச்சோடி காணப்பட்டது. குடியரசு தின விழாவில் பேசிய ஆளுநர் மிசோ அடையாளத்தையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்தார்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக குடியரசு தினவிழாவை பொது மக்கள் புறக்கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வட கிழக்கு மாநிலங்கள் முழுக்கவே இன்று இந்த சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Mizoram Governor Kummanam Rajasekharan on Saturday addressed an almost-empty ground here on the 70th Republic Day, due to a statewide boycott call given by an umbrella organisation against the Citizenship (Amendment) Bill.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X