For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல் பந்திலேயே சிக்ஸர்... மிசோரம் முதல்வரின் முதல் கையெழுத்து எதற்கு தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    மிசோரம் முதல்வரின் முதல் கையெழுத்து எதற்கு தெரியுமா?- வீடியோ

    அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் முதல் வேலையாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று மிசோ தேசிய முன்னணி கட்சியின் முதல்வர் வேட்பாளர் ஜொரோம்தங்கா அறிவித்துள்ளார்.

    சென்ற மாதம் 28- ம் தேதி ஒரே கட்டமாக அங்குள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் ஆளும் காங்கிரஸ் கட்சியை பின்னுக்கு தள்ளி, மிசோ தேசிய முன்னணி வெற்றி பெற்றது.

    Mizoram will implement total prohibition, says zoramthanga

    மிசோ தேசிய முன்னணி 26 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 5 இடங்களிலும், பாரதிய ஜனதா 1 இடத்திலும், மற்றவை 8 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    கடந்த 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 34 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ், இந்த முறை 5 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இதன்மூலம், காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்ற கருத்து கணிப்புகளை தவிடு பொடியாக்கியது மிசோ தேசிய முன்னணி.

    ம.பி., ராஜஸ்தான், சட்டீஸ்கரில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர்கள் இவர்கள்தான்! ம.பி., ராஜஸ்தான், சட்டீஸ்கரில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர்கள் இவர்கள்தான்!

    மிசோரமில் 1997 ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது, பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், 2015ல் தடை நீக்கப்பட்டு, மதுபான கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், மதுவிலக்கை மையப்படுத்தி அனைத்து கட்சிகளும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதன்படி, 40 தொகுதிகளில், 26 தொகுதிகளை மிசோரம் தேசிய முன்னணி கட்சி பிடித்துள்ளது.

    இந்த நிலையில், மிசோரம் தேசிய முன்னணி கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள, ஜொரோம்தங்கா கூறுகையில், மாநிலத்தில் சாலை வசதி மேம்படுத்தப்படும். முழு பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றார்.

    English summary
    Mizoram National Front party CM candidate zoramthanga has announced that Mizoram will implement total prohibition.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X