For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பலத்த கவனிப்பு + செம மரியாதை.. விஜயவாடாவில் திக்குமுக்காடிய மு.க ஸ்டாலின், உதயநிதி!

முக ஸ்டாலினுக்கு ஜெகன் மோகன் ரெட்டி உபசரித்து விருந்தளித்தார்

Google Oneindia Tamil News

Recommended Video

    விஜயவாடாவில் முக ஸ்டாலினுக்கு செம கவனிப்பு-வீடியோ

    விஜயவாடா: நேத்து முக ஸ்டாலினுக்கு செம கவனிப்பு.. ஜெகன்மோகன் பதவியேற்றதுமே திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கிய முக்கியத்துவமே தனி ஸ்பெஷல்தான்!

    176 இடங்களைக் கொண்ட ஆந்திர சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் 151 இடங்களில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது. உடனடியாக போனை எடுத்து ஜெகன் மோகனுக்கு வாழ்த்தை சொன்னார் முக ஸ்டாலின்!

    நேற்று விஜயவாடா அருகே உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் முதல்வராகவும் பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவுக்கு ஸ்டாலினுக்கு முறையான அழைப்பை விடுத்திருந்தார் ஜெகன் மோகன்.

    மோடியின் பதவியேற்பு விழாவை கோட்டைவிட்ட ஜெகன், சந்திரசேகர்ராவ்.. காரணம் தெரிஞ்சா நொந்துடுவிங்க! மோடியின் பதவியேற்பு விழாவை கோட்டைவிட்ட ஜெகன், சந்திரசேகர்ராவ்.. காரணம் தெரிஞ்சா நொந்துடுவிங்க!

    குங்குமப் பொட்டு

    குங்குமப் பொட்டு

    இந்த அழைப்பை ஏற்று, பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க ஸ்டாலின் கலந்து கொள்ள விஜயவாடா சென்றார். கூடவே உதயநிதியையும் அழைத்து சென்றார். அங்கு சென்றதில் இருந்தே ஸ்டாலினுக்கு பலத்த வரவேற்புதான். ஆரத்தி எடுத்து, பொட்டு வைத்து இன்புற்று வரவேற்றனர் ஸ்டாலினை! குங்குமப் பொட்டுடனேயே மேடையில் தெலுங்கில் வாழ்த்து சொல்லவும், அரங்கமே அதிர்ந்தது.

    விருந்து

    விருந்து

    முதலமைச்சராக பதவியேற்றதும், தனது வீட்டில் ஸ்டாலின், உதயநிதி, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் ஆகிய 3 பேருக்கு மட்டும் ஸ்பெஷல் விருந்து ரெடி பண்ணப்பட்டது. விழா முடிந்ததும், வீட்டுக்கு வந்தார் ஜெகன்மோகன். காரை விட்டு இறங்கியதும் அவருக்கு ஒரு பெரிய பூசணிக்காயில் திருஷ்டி சுற்றி போடப்பட்டது.

    வரவேற்பு

    வரவேற்பு

    இதையடுத்து, சிறிது நேரத்திலேயே வீட்டுக்கு ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், சந்திரசேகர் ராவ் வந்தனர். அவர்களை வாசலிலேயே நின்று வரவேற்ற ஜெகன்மோகன், பொக்கே கொடுத்து வரவேற்றார். பிறகு வீட்டின் ஹாலில் இவர்கள் 4 பேரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். ஒன்றாக சாப்பிட சென்றார்கள். சாப்பிடும்போது மற்ற நிர்வாகிகளும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டார்கள்.

    உரிய மரியாதை

    உரிய மரியாதை

    ஜெகன்மோகன் ரெட்டிக்கு இந்த பக்கம் சந்திரசேகரராவ், அந்த பக்கம் உதயநிதி உட்கார்ந்திருந்தனர். உடன் சாப்பிட்ட முக்கிய நிர்வாகிகள் ஜெகன் மோகன் உதயநிதிக்கு அறிமுகம் செய்ய, பதிலுக்கு உதயநிதி அவர்களுக்கு வணக்கம் வைத்தார். ஆக மொத்தம் அங்கு போய் இறங்கியதில் இருந்து கிளம்பும்வரை ஸ்டாலினின் விஜயவாடா பயணம் உரிய மரியாதை + பலத்த கவனிப்புடன் நடந்து முடிந்தது!

    English summary
    Jagan Mohan Reddy sworn in as the Chief Minister of Andhra Pradesh in Vijayawada. Following this, DMK Leader MK Stalin participated in AP CM Jaganmohan Reddys feast with Udhayanidhi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X