For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாரதேர் துதியோ, சாதினோதா ஜூத்தே, ஷாமில் ஹோதே பாங்காளேர்.. கொல்கத்தாவைக் கலக்கிய மு.க.ஸ்டாலின்

Google Oneindia Tamil News

Recommended Video

    கொல்கத்தாவில் பெங்காலியில் பேசிய ஸ்டாலின்- வீடியோ

    கொல்கத்தா: வங்க மொழியில் சூப்பராக பேசி கொல்கத்தாவில் திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு கலக்கு கலக்கினார்.

    கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையிலான கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது ஸ்டாலின் தனது பேச்சை வங்கமொழியில் தொடங்கினார்.

    அவர் பேசுகையில்

    பாங்காளேர் பாகி தேர்! தமிழ்நாடூர் ஸ்டாலினேர், ப்ரேம் போரா நமோஷ்கார். ஹஜார் மிலேர் தூர் திகே, ஆப்னார்கே தேக்தே ஏஷ்ச்சி. தூரே த்தேக்கேஓ, ஆம்ரா ஆக்தை, மூல் ஷூதே, ஷாமில் ஹோயே ஆச்சி.

    வங்க மொழி

    வங்க மொழி

    கொல்கத்தா- திண்டுகலேர் ஜாதிய ராஸ்தா, அமதேர் தேஷ் ஏவோம் மோனேர், ஷொயுக்தோ கோர்ச்சே..

    பாரதேர் துதியோ, சாதினோதா ஜூத்தே, ஷாமில் ஹோதே பாங்காளேர் ஒக்னி கோன்யா, சஹோஜ் மானுஷ் ஏவோம் அமர் போன், சொந்த்யோ மமதா பேனர்ஜி தீதீ, ஆகமோனே ஆமி ஷாமில் ஹோயேச்சி..
    என்று வங்க மொழியில் ஸ்டாலின் பேசினார்.

    நேர்கோட்டில்

    நேர்கோட்டில்

    அதன் அர்த்தம் பின்வருமாறு:

    வங்கத்துப் புலிகளே!

    உங்களுக்கு தமிழ்நாட்டு ஸ்டாலினின் அன்பு வணக்கங்கள்!

    பல நூறு மைல்கள் தாண்டி உங்களைக் காண வந்திருக்கிறேன். தூரமாக நாம் இருந்தாலும் ஒரே நேர்கோட்டில் தான் இருக்கிறோம்.

    எளிமையான மனிதர்

    எளிமையான மனிதர்

    கொல்கத்தா - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை நம்மை இணைத்திருக்கிறது.

    இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்துக்காக வங்கத்து சகோதரி, இரும்புப் பெண்மணி, எளிமையான மனிதர் மம்தா பானர்ஜியின் அழைப்பை ஏற்று நான் வந்திருக்கிறேன்.

    தமிழகம்

    தமிழகம்

    தமிழுக்கு மிக நெருக்கமான ஒரு மொழி உண்டென்றால் அது வங்கமொழி தான். தமிழில் அதிகம் மொழி பெயர்க்கப்பட்ட அயல் மொழிகளில் முக்கியமானது வங்கமொழி. வங்கத்து விவேகானந்தருக்கு எங்கள் குமரியில் நினைவகம் அமைத்துள்ளோம். மகாகவி ரவீந்திரநாத் தாகூர் தனது சாந்தி நிகேதன் கல்வி நிறுவனத்தை அமைக்க நிதி திரட்ட தமிழகம் தான் வந்திருந்தார்.

    பிறக்க வேண்டும்

    பிறக்க வேண்டும்

    எங்கள் தமிழ்க்கவி பாரதியார் தனது குருவாக ஏற்றுக்கொண்டது வங்கத்தில் வாழ்ந்து வந்த ஐரிஷ் பெண்மணியான நிவேதிதாவைப் பார்த்துத் தான். வங்கத்து நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் மீண்டும் பிறந்தால் தமிழனாக பிறக்க வேண்டும் என்றார்.

    சுதந்திர போராட்டம்

    சுதந்திர போராட்டம்

    இப்படி அரசியல், இலக்கியம், ஆன்மிகம் அனைத்திலும் தமிழர்களும் வங்காளிகளும் சகோதர, சகோதரிகள்.

    இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த வீரம் மிக்க இனங்களில் வங்கமும், தமிழகமும் முக்கியமானது. இதோ இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்துக்காக வங்கத்து சகோதரி, எளிமையான மனிதர் மம்தா பானர்ஜியின் அழைப்பை ஏற்று நான் வந்திருக்கிறேன் என்றார் ஸ்டாலின்.

    English summary
    DMK President MK Stalin speaks in Bengali while he was attending Mamta Banerjee's rally.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X