For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹே அப்படி போடு.. இப்படி போடு.. 4 துப்பாக்கிகளுடன் ஆபத்தாக நடனமாடிய பாஜக எம்எல்ஏ திடீர் சஸ்பெண்ட்!

Google Oneindia Tamil News

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக எம்எல்ஏ அறை ஒன்றில் துப்பாக்கிகளை ஏந்திய படி ஏதோ சினிமா வில்லன் போல் நடனமாடியவரை கட்சி தலைமை 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்துள்ளது.

பாஜக எம்எல்ஏ பிரணவ் சிங் பத்திரிகையாளரை மிரட்டிய விவகாரத்தில் அக்கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் தனது வீட்டில் மது அருந்தி விட்டு தனது ஆதரவாளர்களுடன் நடனம் ஆடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவர் கையில் மதுவுடனும் 4 துப்பாக்கிகளுடனும் நடனம் ஆடியுள்ளார். அத்துடன் துப்பாக்கியை வாயில் பிடித்தபடியும் நடனம் ஆடினார். மேலும் தகாத வார்த்தைகளால் நண்பர்களை திட்டியும் உள்ளார். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர்.

வீடியோ

வீடியோ

மேலும் அந்த துப்பாக்கிகளுக்கு பிரணவ் உரிமம் பெற்றாரா என்பது குறித்து்ம விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் அனில் புலானி கூறுகையில் பிரணவ் டான்ஸ் ஆடும் வீடியோவை நானும் பார்த்தேன்.

 3 மாதங்கள்

3 மாதங்கள்

இது கண்டனத்துக்குரியது. ஏற்கெனவே பிரணவ் சிங் மீது இது போன்ற புகார்கள் இருந்தது. அதனால்தான் அவர் கட்சியிலிருந்து 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மாநில தலைவர்கள்

இந்த விவகாரம் குறித்து உத்தரகண்ட் மாநில பாஜக தலைவர்களுடன் பேசி விரைவில் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்றார். இந்த நிலையில் பிரணவை கட்சியிலிருந்து நீக்குமாறு உத்தரகண்ட் மாநில கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பரபரப்பு

பரபரப்பு

இந்த நிலையில் துப்பாக்கிகளை ஏந்திய படி நடனமாடிய பாஜக எம்எல்ஏ பிரணவ் சிங் சாம்பியனை அக்கட்சி தலைமை 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
Bharatiya Janata Party (BJP) has expelled Kunwar Pranav Singh Champion for 6 years, he was already suspended from the party. He was seen brandishing guns in a recent viral video.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X